அருள்மிகு சென்னக் கேசவப் பெருமாள் திருக்கோவில் (பூங்கா நகர் - பூக்கடை)
God Name : ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
முன்நாளில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையருகே இருந்து இவ்வாலயத்தை ஆங்கிலேயர்கள், ஆயுதக் கிடங்காக மாற்றி விட்டனர். பொது மக்களின் எதிர்ப்பு பெருகிவிடவே இப்போது இருக்கும் இடத்தில் ஆலயத்தை கட்டி கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ நரசிம்மர், தாயார்: செங்கமலவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சென்னக் கேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவராக கேசவரும், உற்சவராக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கேசி எனும் அசுரனை சம்ஹாரம் செய்ததால் கேசவன் எனும் திருநாமம் கொண்டார்.
உற்சவ மூர்த்திகளாக கௌதுகர், உற்சவபேரர், சயனபேரர், பலிபேரர், சென்னக் கேசவர் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர்.
தெற்குப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் ஒரு புறமும், அழகியசிங்கர் மறு புறமும் தரிசனம் தருகின்றனர். மேற்கு நோக்கி ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ராமபிரான் மூலவராகவும், உற்சவராகவும் சேவை சாதிக்கின்றார். சீதா தேவி, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கணன் ஆகியோர் உடன் உள்ளனர்.
செங்கமலவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆழ்வாராதிகளை சேவிக்கலாம்.
வடக்குப் பிரகாரத்தில் வேணுகோபாலன், ஆண்டாள், பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், நாதமுனிகள் ஆகியோரை சேவிக்கலாம். ருக்மணி - சத்யபாமா தேவியர்களுடன் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.
அழகிய முன் மண்டபமும், அதையொட்டிய அழகிய குளமும் அமையப் பெற்ற கோவில். மல்லிகேஸ்வரர் ஆலயமும் இந்த ஆலயமும் அடுத்தடுத்துள்ளது. இரண்டுக்கும் நடுவே திருக்குளம். மல்லிகேஸ்வரர் பிரகாரத்திலிருந்தும் ஒரு வாசல் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.