அருள்மிகு ஸ்ரீ சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் (பூங்கா நகர் - பூக்கடை)
God Name : மல்லீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
தற்போது உயர் நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த மல்லிகேஸ்வரர் மற்றும் சென்னக் கேசவர் கோவில்களை ஆங்கிலேயர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டதாகவும், இதனால் கோபமுற்ற மக்களை சமாளிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
பிக்கோட் துரை என்பவரிடம் மொழிபெயர்ப்பாளராக இருந்த மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரின் ஆலோசனைப்படி, இடிபட்ட கற்களைக் கொண்டே தற்போதுள்ள இடத்தில் வெள்ளையர்கள் நிலம் கொடுத்ததாகவும், முத்துக்கிருஷ்ண முதலியார் தனது சொந்த செலவிலேயே இக்கோவில்களை கட்டி முடித்தார் எனவும் குறிப்பொன்று கூறுகிறது.
இக்கோவிலின் தீர்த்தக் கிணற்றிலுள்ள தீர்த்தத்தையே அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர். தவிர, முன்நாளில், நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுப்பது இந்த தீர்த்தத்தின் மீதுதான் என கூறப்படுகிறது.
மூலவர்: மல்லீஸ்வரர், அம்பாள்: பூரணியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மல்லீஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி.
அவரைப் பார்த்த வண்ணம் பூரணியம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். போக சக்தியின் வடிவமாக மனோன்மணியம்மை இருப்பதாக ஐதீகம்.
பிரசன்ன விநாயகரையும் சூரியனையும் வழிபட்டு ஆசி பெற்று, பிரகார வலத்தைத் தொடர்ந்தால் யாக சாலையையும் தீர்த்தக் கிணற்றையும் காணலாம். அடுத்து வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடனாய சுப்ரமண்யரை தரிசிக்கலாம்.
மேற்கு பிரகார கோடியில் அம்பாள் பிரம்மராம்பிகையை வழிபடலாம். கிழக்கு பார்த்த சந்நிதி. மிகுந்த வரப்பிரசாதி எனப் போற்றுகின்றனர். இரவு வேளைகளில் இவள் உலா வருவதால், சலங்கை சத்தம் மெல்லியதாக கேட்குமாம்.
உற்சவ மூர்த்திகளான ஆறுமுகர், ஆதிசங்கரர், பைரவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் ஆகிய விக்ரகங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. கல்யாண விநாயகரை கல்யாண மண்டபத்தில் தரிசிக்கலாம்.
வருடத்திற்கு மூன்று மாதம், இங்கு அர்ச்சகர்களுக்கு ஆகம பயிற்சி அளிக்கின்றனராம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.