அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் - கந்த கோட்டம் (ரட்டன் பஜார் - பாய்கடை)
God Name : மூலவர்: கந்தசாமிக் கடவுள்் உற்சவர்: முத்துக்குமாரஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மாரி செட்டியாரும் அவரது நண்பரான கந்தப்ப ஆசாரியும் பாத யாத்திரையாக திருப்போரூர் சென்று வழிபடுவது வழக்கம். வெயிலில் நடந்த களைப்பு மேலிட்டதால், வழியிலுள்ள வள்ளியம்மை ஓடையருகே இருவரும் படுத்துத் தூங்கிவிட்டனர். செட்டியாரின் கனவில் தோன்றிய முருகன், தான் ஒரு மரப் பொந்திலுள்ள புற்றில் இருப்பதாகத் தெரியப்படுத்தினார்.
அந்தப் புற்றைக் கிளறிப் பார்த்ததில், அதற்குள்ளிருந்து வெளிப்பட்ட அழகிய சிலையை எடுத்துக் கொண்டார்.
சென்னைக்குத் தூக்கிச் செல்ல ஏதுவாக, சின்னஞ் சிறு பாலகனாக வடிவெடுத்து, லேசான எடைக்கு மாறி, அவர்கள் தூக்கிச் செல்ல முருகன் உதவினார் எனக் கூறப்படுகிறது.
ராசப்ப செட்டித் தெருவிலுள்ள முத்யாலு நாயக்கர் தனக்குச் சொந்தமாக இருந்த பூந்தோட்டத்தைக் கோவில் கட்டுவதற்கு எழுதி வைத்துவிட்டார். மாரி செட்டியார் அவரது மனைவியின் நகைகளை விற்று இக்கோவிலைக் கட்டியதாகக் குறிப்பொன்று கூறுகிறது. இக்கோவில் 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கிழக்கு பார்த்த ராஜகோபுரத்தைக் கடந்து உள் சென்றதும், நாம் காணும் பரிவேடண மண்டபத்தில் அமர்ந்துள்ள வேழமுக பிள்ளையாரை வணங்கி ஆசி பெற்று, அடுத்துள்ள பைரவர் மற்றும் வீரபத்ரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
கிழக்குப் பிரகாரத்தில் ராமலிங்க அடிகளார், பாம்பன் ஸ்வாமிகள் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம். சூரியன், வீரபாகு ஆகியோரைத் தரிசித்து, காவல் தெய்வங்களான இடும்பனையும் - கடம்பனையும் வழிபடலாம்.
பிரதான கருவறையில் மூலவராக கந்தசாமிக் கடவுள் எழுந்தருளி அருள் புரிகின்றார். அழகே உருவாகக் காட்சி தரும் இவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வலப்புறமாக வள்ளியும், இடது புறமாக தெய்வயானையும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். யானை வாகனம் அவர் முன்னே நிற்க, மயில் பின்னால் உள்ளது. உற்சவ மூர்த்தியான செல்வ முத்துக் குமார ஸ்வாமியின் வடிவம் மனதை விட்டு அகலாதது.
கோஷ்டத்தில் நித்ய உற்சவ முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஷண்முகர், வீரபாகு, கணபதி, நவ வீரர்கள், வீரபத்ரர், மாகாளி, நான்முகன் என எண்ணற்ற தெய்வங்களைத் தரிசிக்கலாம். குக்குட ஸ்கந்தன் மற்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ள 16 வடிவங்கள் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. முக மண்டபத்தில் அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள், மாரி செட்டியார் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
31 படிகள் கொண்ட சரவணப் பொய்கை எப்போதும் வற்றாமல் நீர் நிறைந்து காணப்படும். பார்க்க அழகாக இருக்கும். இதனருகே 32 கால் மண்டபத்தில் சித்தி - புத்தி சமேத சர்வசக்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். கந்த பண்டாரம் பூஜித்த கணபதி.
நாட்டிய சாஸ்திரங்களின் 108 கரணங்களைச் செதுக்கி வைத்துள்ள பள்ளியறைக் கதவு, கண்ணாடிப் பேழையில் தில்லை நடராஜரின் திருவுருவம், வள்ளலாருக்குக் கண்ணாடியில் காட்சி தந்த முருகன், கண்ணாடி அறை போன்றவைகளை அவசியம் பார்க்க வேண்டும். அவ்வளவு அற்புதமான படைப்புகள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.