அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் (கோயம்பேடு)

God Name : குறுங்காலீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

அரசன் ஒருவன் இப்பகுதி அருகே தேரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டிருந்த லிங்கத்தின் மீது தேர் சக்கரம் ஏறியது. லிங்கத்திலிருந்து ரத்தம் வெளிவரவே பயந்துபோன அரசன் கீழே இறங்கி பார்த்தபோது, லிங்கம் புதையுண்டிருப்பது தெரிய வந்தது. அதே இடத்தில் லிங்கத்திற்கு ஒரு கோயில் எழுப்பினான் என வரலாறு. தேர் சக்கரம் லிங்க பாணத்தை அழுத்தியபடியால், லிங்கம் (குள்ளமாக) குறுகலாக காட்சி தந்தது. இதனால் குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஸ்ரீ ராமரின் புதல்வர்களான லவனும்-குசனும் வழிபட்ட ஸ்தலம். தந்தையை எதிர்த்து நின்ற தோஷம் போவதற்காக, வால்மீகி முனிவரின் யோசனைப்படி, லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டதாக கூறப்படுகிறது. குசன் பூஜித்ததால் குசலபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. கோ (பசு) - அயம் (இரும்பு) - பேடு (வேலி) - கோயம்பேடு. கோ சம்ரக்ஷணம் நடந்த இடம். லவகுச புஷ்கரிணியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருகின்றனர். தர்ப்பணம் செய்ய கோயிலிலேயே இலவச ஏற்பாடு செய்து தருவதாக கூறப்படுகிறது.
மூலவர்: குறுங்காலீஸ்வரர், அம்பாள்: தர்மசம்வர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் குறுங்காலீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். வடக்கு நோக்கி காட்சி தருகின்றார். இவருக்கு குசலபுரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் தர்மசம்வர்த்தினி எனப்படும் அறம் வளர்த்த நாயகி உடன் எழுந்தருளியிருக்கின்றார். பக்தர்களின் குறைகளைக் களையப் புறப்பட ஆயத்தமான நிலையில், இடது காலை முன்னே வைத்து காட்சி அளிக்கும் அம்பாள் ஒரு வரப்பிரசாதி. கோஷ்டத்தில் சுவாமிக்குப் பின்னால் வழக்கமாக இருக்கும் லிங்கோத்பவருக்கு மாற்றாக, இங்கே தட்சிணாமூர்த்தி காணப்படுவது வித்தியாசமான சிறப்பு. முன்னங்காலை மடக்கி எழுந்திருக்கும் பாவனையில் நந்தியம்பெருமான் காணப்படுகிறார். பிரதோஷ வழிபாட்டின்போது நந்தியம்பெருமானே கலந்துகொள்வதாக ஐதீகம். தூணில் காணப்படும் சரபேஸ்வரர் இங்கு பிரசித்தி பெற்ற தெய்வம். சரபேஸ்வரர் ஆராதனை சிறப்பாக நடத்துகின்றனர். பிரகார சுற்றில் கணபதி, வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், ஜ்வரஹரேஸ்வரர், சாஸ்தா, லட்சுமி, ஞான சரஸ்வதி, அகத்தீஸ்வரர், அண்ணாமலையார், காசி விஸ்வநாதர் மற்றும் நாகர்களை தரிசிக்கலாம். பிரதோஷ நாயகனான சிவன்-பார்வதி திருவுருவங்கள் அற்புதமாக உள்ளன. பஞ்சவர்ண வண்ண நவகிரகங்கள் அழகாக இருக்கின்றனர். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை அருணன் செலுத்த, அதில் சூரியன் தனது இரு மனைவிகளுடன் காட்சி தருவதும் மற்ற கிரகங்கள் வாகனங்களுடன் சுற்றி இருப்பதும் வித்தியாசமான அழகு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.