அருள்மிகு ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோவில் (எழும்பூர்)

God Name : ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் மற்றும் ஸ்ரீநிவாசப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

அத்திரி, விஸ்வாமித்ரர், கௌதமர், பரத்வாஜர், வசிஷ்டர், காஸ்யபர் மற்றும் கௌசிகர் ஆகிய சப்த ரிஷிகள் ஆராதித்த பெருமாள் இங்கு கோவில் கொண்டதால் இவ்வுர் எழுமூர் எனப் பெயருற்று, நாளடைவில் மருவி எழும்பூர் என்றானது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மூலவராகவும், உற்சவ மூர்த்தியாகவும் சேவை சாதிக்கும் இவரே புராதன மூர்த்தி. முதலில் லட்சுமி நாராயணனாகவும், பிறகு ஸ்ரீநிவாசராகவும் சேவை சாதிப்பதாக ஐதீகம். மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பத்மாவதித் தாயாரும் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன் ஒரு சந்நிதியிலும், தனி சந்நிதியில் ஆஞ்சநேயரும், ஆண்டாளும் எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.