அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோவில் (கோபாலபுரம்)

God Name : ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

திருத்துறைப்பூண்டியில் நிலத்தை அகழ்ந்தபோது 1917 ஆம் ஆண்டு கிடைத்த கற்சிலையான இந்த வேணுகோபால ஸ்வாமி 12 வருடங்கள் ஆசிரம வாசமிருந்து, பின்னர் இங்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மேற்கரங்களில் சங்கு-சக்கரம் கொண்டும், கீழிரண்டு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையிலும், இடது காலை ஸ்திரமாக ஊன்றியும், வலது பாதத்தை இடது பாதம் மீது மடித்து வைத்தும் ஒய்யாரமாகக் காட்சி தருகின்றார். பின்புறமுள்ள பசு ஒன்று தன் நாவால் பாதத்தை வருடிக் கொண்டிருக்கின்றது. சந்தனக்காப்பு செய்யும்போது சந்தனத்தை உலர வைக்கும் உஷ்ண மேனியாகவும், வெண்ணெய்க்காப்பு செய்யும்போது வெண்ணெய் உருகாமல் தக்க வைக்கும் குளிர்மேனியாகவும் மாற்றிக் கொள்ளும் அதிசயத்தைச் செய்கிறார் மூலவர். மண்டபத்தில் சிவலிங்க ஸ்வரூபமாய் ஏகாம்பரேஸ்வரரும், பளிங்கு திருவுருவமாய் காமாட்சியும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். காஞ்சி பரமாச்சாரியாரால் கொடுக்கப்பட்ட காமாட்சியின் உற்சவ விக்ரகம் எந்த அலங்காரத்திலும் ஜொலிக்கும் அழகு கொண்டது. இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, ஆதிசங்கரர், சந்திரமௌலீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். விஷ்ணுவின் அவதாரங்களைச் சித்தரிக்கும் வகையில் வெள்ளிக்கவசம் போடப்பட்டுள்ளது. பிள்ளையார், வள்ளி - தேவசேனா சமேத முருகன், சீதா-ராமர்-லக்ஷ்மணர்-ஹனுமன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். தங்கத்தாலான மண்டபத்தையொட்டி நரசிம்மர், விஷ்ணு, வராஹர், சக்ரத்தாழ்வார் ஆகியோர் சேவை சாதிக்கின்றனர். ஆஞ்சநேயர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோரைச் சேவிக்கலாம். நவகிரக சந்நிதியும் உள்ளது. அரசமரத்தடியில் ஒரு பிள்ளையாரும், வில்வ மரத்தின் பக்கத்தில் ஐயப்பனும் சந்நிதி கொண்டு அருள்புரிகின்றனர். அரசமரத்தடி பிள்ளையாருக்கு ஸ்ரீ அசோத்த மஹா கணபதி எனப் பெயர். காஞ்சி மஹா பெரியவர் இங்கு வருகை புரிந்து இங்குள்ள மூர்த்திகளை வழிபட்டு ஜபம் செய்தார் எனவும், இந்த அரசமரத்தடியில் ஒரு பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார் எனவும், அதன்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவரே அசோத்த மஹா கணபதி எனவும் ஆலயத்தில் கூறினார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.