அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் (பாண்டி பஜார் - தியாகராயநகர்)

God Name : ஸ்ரீ சுந்தர வதாண்யேஸ்வரர், ஸ்ரீ லட்சுமி நாராயணர், ஸ்ரீ கல்யாண வரதராஜர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

அகஸ்தியர் கூறியுள்ள யோகநெறியில் வெற்றி பெற்ற சாதகனுக்கு சிவபெருமான், சிவ-சக்தி வடிவில் தரிசனம் தருகின்றார். இந்த யோக கலைக்கு சந்திர கலா ஞானம் எனப் பெயர். இதை நினைவு படுத்தும் வகையில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்திற்கு பின்னால் சந்திரசேகரர் திருவுருவமும் சக்தியின் வடிவமும் இருக்கின்றது. ஷண்மத கடவுளர்கள் எழுந்தருளியுள்ள ஸ்தலம். 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக குறிப்பு ஒன்று கூறுகிறது.
ஆலயத்துள் நுழைந்ததும் இடதுபுறமாக திரும்பினால் உள்ள தனிக்கோவிலில் விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். ஸ்ரீ நித்யானந்த கணபதி என்ற பெயர். சித்தி-புத்தி தேவியர்கள் உடன் உள்ளனர். மண்டபத்தின் உள்ளும் - புறமும், விதானத்திலும் பல்வித விநாயகர்களின் சிற்பங்களும், வண்ண ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. வியாசர் கூற கணபதி எழுதும் மஹாபாரத சிற்பம் கண்ணை கவரும் அழகுடன் காணப்படுகிறது. அர்ஜீணன் பாசுபதம் பெறுவது, அகஸ்தியரின் கமண்டலத்தை காகம் கவிழ்த்து காவிரியை பெருக்குவது போன்ற சிற்பங்கள் அருமையானவை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக ஸ்ரீ சுந்தர வதாண்யேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அழகிய லிங்க மூர்த்தம். லிங்கத்திற்கு பின்னால் சந்திரசேகரர் திருவுருவமும் சக்தியின் வடிவமும் உள்ளது. திருமணக் கோலம். அம்பாள் ஸ்ரீ சுந்தர வடிவாம்பிகையும் அருகே எழுந்தருளியுள்ளார். பெயருக்கேற்ற சௌந்தர்யம். சாந்நித்யம் மிக்க சந்நிதி. வடக்கு பார்த்த சந்நிதியில் லோபமுத்ரை சஹிதம் அகஸ்தியர் காட்சி தருகின்றார். எதிரே உற்சவ விக்ரஹங்கள் வைக்கப்பட்டுள்ளன. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடனாய முருகன் எழுந்தருளி அருள் புரிகின்றார். சிவசுப்ரமண்யர் எனும் திருநாமம். இந்த மண்டபத்திலும் கண்ணைக் கவரும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரை அருணன் செலுத்த, சூரிய பகவான் தனது மனைவிகளுடன் நடுநாயகமாக எழுந்தருளியுள்ளார். அவரவர்களுக்குரிய வாகனங்களுடன் மற்றைய கிரகங்களும் காட்சி தருகின்றனர். அற்புதமான சிற்பங்கள். வலச்சுற்றில் பைரவர், நாகர், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சக்கரத்தாழ்வார்/நரசிம்மர், துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்ரீ லட்சுமி நாராயணன் மற்றும் கல்யாண வரதராஜன் மூலவராகவும் உற்சவராகவும் சேவை சாதிக்கின்றனர். ஸ்ரீ ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.