அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் (மேற்கு மாம்பலம்)

God Name : ஸ்ரீ பட்டாபிராமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

ஸ்ரீ ராமர் பத்ராசலத்தில் காட்சி தரும் அதே கோலத்தில் இங்கும் காட்சி தருகிறார். இதனால் இத் தலத்தைத் தட்சிண பத்ராசலம் என அழைக்கின்றனர். வங்காலய குப்பையா செட்டியார் எனும் தனவந்தர் 1927 ஆம் ஆண்டு கட்டிய கோவில் இது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மஹா சம்ப்ரோக்ஷண வைபவத்திற்கு திருநீர்மலை பெருமாள் எழுந்தருளியுள்ளார். இது திருநீர்மலை திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலம் என்று கூறுவார்கள்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பட்டாபிராமர் - இடது மடியில் சீதா பிராட்டியை இருத்தி தரிசனம் தர, வலப்புறம் லக்ஷ்மணன் குடைப் பிடிக்க, சிறிய திருவடியான ஹனுமன் ஸ்ரீ ராமரின் பாதங்களைத் தாங்கியிருக்க, பரத-சத்ருக்கணர்கள் உடன் இருக்க பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். ஸ்ரீ ராமர் பத்ராசலத்தில் காட்சி தரும் அதே கோலத்தில் இங்கும் காட்சி தருகிறார். இதனால் இத் தலத்தைத் தட்சிண பத்ராசலம் என அழைக்கின்றனர். வலப்பக்க சந்நிதியில் ரங்கநாதர் பாம்பணையில் சயனக் கோலம் கொண்டு காட்சி தருகின்றார். திருவடி பக்கத்தில் ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் அமர்ந்துள்ளனர். நாபி கமலத்தில் பிரம்மா காட்சி தருகிறார். அருகே சேவித்தபடி ப்ருகு மகரிஷி. இடப்புறமாக யோக நரசிம்மர். தாயார் ஸ்ரீ ரங்கநாயகி தனிக் கோவில் கொண்டுள்ளார். குபேர மூலையில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சஞ்ஜீவ ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. சஞ்ஜீவ மலையைக் கையில் ஏந்தியபடி தரிசனம் தருகின்றார். ஆதிசேஷன் தனி சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். புற்றுக்குப் பால் வார்த்து ஆதிசேஷனைப் பிரதக்ஷிணம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் புத்ர பாக்யம் கிட்டும் என்பார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.