அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (மேற்கு மாம்பலம்)
God Name : ஸ்ரீ காசி விஸ்வநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஆதியில் வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலரின் கண்ணுக்கு லிங்கம் ஒன்று புதையுண்டிருப்பது தெரிந்தது. பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த லிங்கத்தை ஊர்மக்களுடன் சேர்ந்து பெயர்த்து எடுக்க முயற்சித்தனர். எவ்வளவு முயன்றும் முடியவில்லை. பாதாளம் போல ஆழ தோண்டி விட்டனர் அப்படியும் எடுக்க வரவில்லை. இறைவன் இங்கேயே எழுந்தருள திருவுளம் கொண்டான் போலும் என தோண்டுவதை கைவிட்டு அங்கேயே இருக்கவிட்டு கோவில் எழுப்பினதாக கூறப்படுகிறது. பிலம் என்றால் பாதாளம். அவ்வளவு ஆழம் தோண்டியதால் இவ்வூர் மகாபிலம் என அழைக்கப்பட்டு மாபள்ளம் என்றாகி நாளடைவில் மருவி மாம்பலம் என்றானதாக கூறுவர். வில்வ வனமாக இருந்தமையால் மகாபில்வம் என்றிருந்து பின்னர் மகாபிலமாகி அதன் பின்னர் மாம்பலம் ஆனதாகவும் கூறப்படுவதுண்டு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். உயரமான பீடத்தில் எழுந்தருளியுள்ள சிறிய லிங்கத் திருமேனி. ஒளி வீசும் தேஜோமய லிங்கம். காசியில் இருப்பது போலவே லிங்கத்திருமேனி அமைந்திருப்பதால் காசி விஸ்வநாதர் எனும் திருநாமம் கொண்டார். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அன்னை விசாலாட்சி எழுந்தருளி அருள் புரிகின்றாள். மிகுந்த வரப்ரசாதி. கோஷ்டத்தில் கணபதி, முருகன், துர்க்கை, பைரவர், நால்வர், சண்டேஸ்வரர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மண்டபத் தூண்களில் சங்கரநாராயணர், யோகநரசிம்மர், அர்த்தநாரீஸ்வரர், நந்தீஸ்வரர், காமாட்சி, சஞ்சீவராயர், கருடாழ்வார், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். நவகிரகங்கள் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.