அருள்மிகு வடபழநியாண்டவர் திருக்கோவில் (வடபழநி)

God Name : மூலவர்: வடபழநி ஆண்டவர்் உற்சவர்: ஷண்முகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

சாலிகிராமம் என்ற பகுதியில் வாழ்ந்த அண்ணாசாமி தம்பிரான் என்பவர், தனது தீராத வயிற்று வலி போக வேண்டி கால்நடையாகவே திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டு வந்தார். முருகனின் அருளால் வயிற்று வலியிலிருந்து குணமடைந்ததும் பல முருகன் தலங்களுக்கு சென்று வழிபட்டார். பழனியிலிருந்து கொண்டு வந்திருந்த பழநியாண்டவர் படத்தை ஒரு ஓலைக் கொட்டகையில் வைத்து பூஜித்து வந்தார். தம்மை நாடி வந்து குறைகளை சொல்பவர்களுக்கு அருள் வாக்கு கூறி வந்தார். பின்னர் யாத்திரை போக தீர்மானித்து, தேனாம்பேட்டையை சேர்ந்த ரத்தினசாமி என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். ரத்தினசாமி, முருகனின் திருவுருவம் ஒன்றை செய்து குறி சொல்லும் மேடைக்கருகே சிறிய கோவில் ஒன்றை கட்டி அதில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். வாரியார் ஸ்வாமிகளின் பணியால் கோவில் பெரிதும் வளர்ந்தது என தல வரலாறு.
ஆலயத்துள் நுழைந்ததும் முதல் தரிசனமாக வரசித்தி விநாயகரை வணங்கி ஆசி பெற்று வலச் சுற்றைத் தொடங்கி அடுத்துள்ள சந்நிதியில் சொக்கநாதரை தரிசிக்கலாம். பின் வள்ளி - தெய்வானை உடனாய ஷண்முகரை தரிசிக்கலாம். அடுத்துள்ள சந்நிதியில் அங்காரக பகவான் தரிசனம் தருகின்றார். அடுத்துள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ள அன்னை மீனாட்சியின் எழிற் கோலம் மனசை விட்டு அகலாது. கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஷண்முகரின் விக்ரஹம் மிகவும் அழகாக இருக்கின்றது. குமரக் கடவுளின் ஆறு முகங்களையும் தரிசிக்க ஏதுவாக அமையப்பெற்ற சந்நிதி. சர்வாலங்காரமும் செய்து ஏலக்காய் மாலையும் அணிவித்து அழகுக்கு அழகு சேர்க்கின்றனர். மூலஸ்தானத்தின் முன்புறமுள்ள சிறு மாடங்களில் இடும்பன் - கடம்பன், துவார விநாயகர் மற்றும் முத்துக்குமார் ஸ்வாமியை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் மூலவராக வடபழநி ஆண்டவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் எழுந்தருளி அருள் புரிகின்றார். வலது கையில் தண்டாயுதம் வைத்தும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும், (கத்யவலம்பிதம்) கௌபீனத்தை அணிந்து துறவு நிலையில் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் கணபதி, நால்வர், தட்சிணாமூர்த்தி, ஸ்கந்த மஹாவிஷ்ணு, நாகசுப்ரமண்யன், வீரபாகு, வீரபத்ரர், பைரவர், மாகாளி, விசாலாட்சி, சிவகாமி சகித நடராஜர், துர்க்கை, பிரம்மா, சூரியன், சண்டேசர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.