அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோவில் (புலியூர் - கோடம்பாக்கம்)
God Name : ஸ்ரீ வேங்கீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் இத்தலத்தில் நீண்ட தவம் மேற்கொண்டார் எனவும், அவர் வழிபட்ட இறைவன் என்பதால் இறைவனுக்கு வேங்கீஸ்வரர், வியாக்ரபுரீஸ்வரர் என்றெல்லாம் பெயர்கள் வந்ததென்றும், இவ்வுரை புலியூர் என அழைத்தனர் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. திரிபுராதிகளை அழிக்க புறப்பட்ட சிவபெருமான், மேருமலையை அம்பாக்கி தொடுத்தாராம். கோடு என்றால் மலை. கோடு-அம்பு-ஆக்கம் என்பதே கோடம்பாக்கம் என்றானதாக கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ வேங்கீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சாந்தநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வேங்கீஸ்வரர். நான்கடி உயரமும் அகலமும் கொண்ட அழகிய லிங்கத் திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. மூலஸ்தான விமானம் கஜப்பிருஷ்ட அமைப்பைச் சேர்ந்தது. இவருக்கு வியாக்ரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் அன்னை ஸ்ரீ சாந்தநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பெயருக்கேற்ப சாந்த ஸ்வரூபியாக திகழ்கிறாள்.
தென்மேற்கு மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர்.
நடராஜரையும், அவரது ஆனந்த நடனத்தை காணும் பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் காரைக்கால் அம்மையார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
நாகரத்தினங்களாக மாறிய நாகமூர்த்திகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். சூரிய-சந்திரர்கள், ஸ்ரீ முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்ரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சிறப்பு மூர்த்தமாக பைரவர் எழுந்தருளியுள்ளார். பிரதக்ஷிணம் செய்யும் வகையில் இவரது சந்நிதி அமைந்துள்ளது. அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்பவர்கள் இவருக்கு நீராஞ்சனம் (தேங்காயில் நெய் விளக்கு) ஏற்றி வழிபட்டால், விபத்து நேருவது குறைகிறதாம்.
அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்கின்றனர். மிக விஸ்தாரமான பிரகாரம். த்வஜஸ்தம்ப பிள்ளையாரில் தொடங்கி, பிரகார வலம் வந்து, முருகன் சந்நிதியை வலம் வந்து, காசி விஸ்வநாதரையும் வலம் வந்து, மீண்டும் த்வஜஸ்தம்பம் வந்தால் ஓம் என்ற ப்ரணவ வடிவம் கிடைக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.