அருள்மிகு கருமாரி திரிபுரசுந்தரி திருக்கோவில் (அசோக்நகர்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக ஸ்ரீ கருமாரி திரிபுரசுந்தரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகே உருவாக வீராசனத்தில் அமர்ந்த கோலம். சிரசை ஐந்து தலை நாகம் குடை பிடித்து அலங்கரிக்க, திருவடி அருகே பூர்ணமேரு கொண்டு அனுக்ரஹ மூர்த்தியாக அமர்ந்துள்ளார். அபய-வரத கரங்கள் இரண்டு, டமருகம்-சூலம் கொண்ட கரங்கள் இரண்டு என நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். கதவில் அநேக பிரார்த்தனை மணிகள். கருவறையின் இரண்டு பக்கங்களிலும் செல்வ கணபதியும், செல்வ முத்துக் குமரனும் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர். வலச்சுற்றில் திரியம்பகேஷ்வர், துர்க்கை, ஸ்ரீநிவாசப் பெருமாள், வீர ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம். நுழைவாயிலில் விநாயகரும் லட்சுமியும் காணப்படுகின்றனர். மண்டபத்தில் சரஸ்வதி தேவி. பண்டிகை நாட்களில் வீதிவுலா நடைபெறும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.