அருள்மிகு கடும்பாடி அம்மன் திருக்கோவில் (சைதாப்பேட்டை)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள சின்னம்மன் என்கிற கடும்பாடி அம்மன் இப்பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக, காவல் தெய்வமாக, கண்கண்ட தெய்வமாக எழுந்தருளி வரமருளும் வரப்பிரசாதி. சுயம்பு மூர்த்தம். சிரசில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, திருவடியை அரக்கனின் தலையில் வைத்து அழுத்தியபடி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். கத்தி, திரிசூலம், டமருகம், குங்குமக் கிண்ணம் ஏந்திய நான்கு கரங்கள் கொண்டு சர்வாலங்காரங்களுடன் காட்சி தருகிறாள். மூலவரின் முன்பாக சிரசு மட்டும் கொண்டு தனி தேவியாக தரிசனம் தருகிறாள். உற்சவ மூர்த்தம் அழகாக இருக்கின்றது. நுழைவாசலில் மதுரை வீரனும், காத்தவராயனும் துவாரசக்திகளாக கோபுரத்தில் காட்சி தருகின்றனர். வரசித்தி விநாயகரும், சுப்ரமண்ய ஸ்வாமியும் எழுந்தருளி ஆசி வழங்குகின்றனர். வேப்ப மரத்தின் அருகே சப்த கன்னியர்கள், சப்த அண்ணன்மார்கள், பரசுராமன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். பல நூற்றாண்டுகளாக வளர்ந்த பெரிய புற்று ஒன்றும் இருக்கின்றது. இதில் வாழும் பாம்பு ஒன்று உள்ளது. வேப்ப மரமும், பாம்பு புற்றும் இக்கோவிலின் பிரசித்தம். ஒற்றைப் பனைமரமும் உள்ளது. எந்த நாட்டிற்கு சென்றாலும் சென்னைக்கு திரும்பி வரும் இவ்வூர் மக்கள் இவளை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.