அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்/ஆதிகேசவர் திருக்கோவில் (சிந்தாதரிப்பேட்டை)
God Name : ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
இது ஆதிபுரீஸ்வரர் கோவிலோடு இணைந்த கோவிலாக விளங்குகிறது. 1740ஆம் ஆண்டு துபாஷ் ஆதியப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்ட கோவில் என ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், 1735ல் இப்பகுதியில் சிறிய நெசவுத் தொழில் மையம் ஆரம்பித்து, தறி நெசவு செய்து வந்தனர். அதனால் சின்னதறிப்பேட்டை என்றழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் சிந்தாதரிப்பேட்டை என்றானதாக கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மரகதப்பச்சையில் பாணலிங்கமும், சதுர ஆவுடையாரும் கொண்ட அழகிய லிங்கத் திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. வலம்புரி விநாயகரும், முருகப் பெருமானும் இரண்டு பக்கங்களிலும் காட்சி தருகின்றனர். முன் மண்டப முகப்பில் சுதை வடிவில் காணப்படும் ரிஷபவாஹனர் அழகாக இருக்கின்றார். அதிகார நந்தி பிரம்மாண்டமாக இருக்கின்றது. பீடத்தில் அனேக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகிறார். திருவடிகளருகே மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உற்சவ அம்மன் விக்ரஹமும், சுக்ரவார அம்மனின் விக்ரஹமும் பேரெழிலுடன் விளங்குகின்றன. கோஷ்ட மூர்த்தங்கள் கிரமப்படி உள்ளன. ஆறுமுகன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதி கொண்டுள்ளனர். விநாயகரை நோக்கி உள்ள சனி பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக உள்ளார். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ ஆதிலட்சுமி தாயார் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றார். உற்சவ மூர்த்தியாக ஹயக்ரீவப் பெருமான் சேவை சாதிக்கின்றார். மூலவரின் எதிரே கருடாழ்வார் காணப்படுகிறார். தூணில் உள்ள தும்பிக்கை ஆழ்வாரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ஆஞ்சநேய மூர்த்தி, சக்கரத்தாழ்வார்/நரசிம்மன், ஆண்டாள், ராமாநுஜர் ஆகியோரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.