அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில் (கிருஷ்ணாம்பேட்டை)
God Name : தீர்த்தபாலீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
இவ்வாலயத்து வன்னி மரத்தடியில் அமர்ந்து அகஸ்தியர் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். நோய் கண்ட அவரது உடல்நிலை குணமடைய, கடல் நீரால் இவ்விறைவனை அபிஷேகம் செய்து பூஜித்து, இறைவனருளால் குணமடைந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இறைவனுக்கு 'நோய் தீர்த்த பிரான்' என்ற பெயரும் உண்டு.
'பாலித்தல்' என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தீர்த்தங்களை பாதுகாக்கும் இறைவன் என்பதாலும், ருத்ரர்கள் நீர் மயமாக விளங்குவதாலும், தீர்த்தவாரியின்போது இவ்விறைவனுக்கே முதலில் தீர்த்தம் வழங்கப்படுவதாலும், இவர் 'தீர்த்தபாலீஸ்வரர்' எனும் பெயர் கொண்டார் எனக் கூறப்படுகிறது.
மாசி மாத தீர்த்தவாரியின்போது, ஏழு சிவாலயங்களின் கடல் நீராட்டு விழாவில், இவ்விறைவனுக்கே முதன்மை தரப்படுகிறது.
இது சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்றாகும்.
மூலவர்: தீர்த்தபாலீஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக தீர்த்தபாலீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். நான்கு பட்டைகள் கொண்ட அழகிய திருமேனி. இடப்புறமாக சற்று சாய்ந்த நிலையில் தரிசனம் தருகின்றார். மாசி மாத மகா சிவராத்திரி தினத்தன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து பூஜை செய்கின்றன. அகஸ்திய மாமுனி பூஜித்த லிங்க மூர்த்தம். எதிரே அதிகார நந்தியை தரிசிக்கலாம்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். எதிரே சிம்ம வாகனம் உள்ளது. மார்கழி மாதத்தில் வெந்நீர் அபிஷேகம் செய்து, ரத்ன கம்பளம் அணிவிப்பதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
ஸ்தல விநாயகராக அநுக்ஞை விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். பாலமுருகன், சூரியன், லட்சுமிநாராயணன், கால பைரவர், நர்த்தன கணபதி, பக்த வீர ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். தென்மேற்கில் வன்னி மரத்தடி சந்நிதியில் சிதம்பர விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். 45 நாட்கள் இவரை வலம் வந்து வழிபட்டால் தீவினைகள் அகலும் என்பர். மாணவ-மாணவிகள் இவரை 'பாஸாக்கும் கணபதி' எனப் போற்றுகின்றனர்.
நுழைவு வாசல் மேலுள்ள முகப்பு மண்டபத்தில், தீர்த்தபாலீஸ்வரருடன் சேர்ந்து கடலில் தீர்த்தம் தரும் மற்றைய ஆறு ருத்ர ஸ்தானங்களின் சுவாமி-அம்பாள் திருவுருவங்கள் சுதை சிற்பங்களாக காட்சி தருகின்றனர். வண்ண சுதை சிற்பங்கள் அழகாக இருக்கின்றன.
இவ்விறைவனுக்கு பானகம், பாயாசம் போன்றவைகளை நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் நற்பலன்கள் கிட்டும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.