அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோவில் (மைலாப்பூர்)
God Name : மல்லீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரார்த்தன் எனும் அரசன் இவ்வூர் மல்லிகை வனத்தில் இறைவனை மனதில் நிறுத்தி இடைவிடாது பூஜித்து பல வேள்விகளை நடத்தி வந்தான். அவனது வேள்விக்கு ஏற்பட்ட இடையூறுகளைப் பொறுத்து மனம் தளராது வேள்விகளை தொடர்ந்து நடத்தி வந்தான். சிவபெருமான் பார்வதி தேவியோடு அவனுக்குக் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆதியில் மல்லிகை வனமாக இருந்த இப்பகுதியில் தோன்றிய சிவலிங்கம் என்பதால் இறைவனுக்கு மல்லீஸ்வரர் என்றுப் பெயர் வந்தது.
சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் இதுவும் ஒன்று.
மூலவர்: மல்லீஸ்வரர், அம்பாள்: மரகதாம்பாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மல்லீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். பெரிய பாணம் கொண்ட அழகிய லிங்கம். கிழக்குப் பார்த்த சந்நிதி. அன்னை மரகதாம்பாள் உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
கோஷ்டத்தில் செல்வ கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வலச்சுற்றில் செல்வ கணபதி, மஹாகணபதி, பால கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், பாலமுருகன், ஐயப்பன், பக்த ஆஞ்சநேயர், கால பைரவர், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசனம் செய்யலாம்.
சனீஸ்வரரும் நவகிரகங்களும் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.