அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோவில் (மயிலாப்பூர்)
God Name : இல்லை
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
'முண்டகம்' என்றால் தாமரை. தாமரை மலர் போன்ற விழிகளை உடையவள் என்பதால் இப்பெயரைக் கொண்டாளோ என எண்ணத் தோன்றுகிறது.
கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் முண்டகக்கண்ணி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. சூல வடிவாய் காட்சி தரும் சிலாரூபம். சிலாரூபத்திற்குள் திரிசூலம் உள்ளது. பின்புறமும் திரிசூல வடிவம் காணப்படுகிறது. கருவறை விமானத்தில் அன்னையின் திருமுகம் சுதை வடிவில் காணப்படுகிறது. ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, தேவ கன்னியர் வெண்சாமரம் வீச அழகாகக் காட்சி தருகிறாள். முகப்பிற்கு மேல் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். கருவறையின் மேற்கூரை தென்னங்கீற்றினால் வேயப்பட்டுள்ளது. சுற்றிலும் வெட்டிவேர் தட்டிகளால் முடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இடப்புறமாக உள்ள சந்நிதியில் அழகிய உற்சவ மூர்த்தியும், பின்புறமாக உள்ள ஆலமரத்தடி நாகப் புற்று மற்றும் நாகதேவதையை தரிசிப்பவர்களுக்கு தோஷ நிவர்த்தி செய்கிறது. ஸ்ரீ ஞான ஜோதி - நர்த்தன விநாயகர், ராமலிங்க சுவாமிகள் மற்றும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். வடபாகத்தில் ஏழு கன்னியர்கள் ரூபமற்ற சிலா வடிவத்தில் காணப்படுகின்றனர். இரண்டு பக்கங்களிலும் ஜமதக்னியும் பரசுராமரும் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். இது 1300 வருடங்கள் பழமையான கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.