அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவில், மயிலாப்பூர்

God Name : அப்பர் சுவாமிகள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் அப்பர் சுவாமிகள் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். மிகப் பெரிய திருமேனியுடன் கூடிய அழகிய லிங்கம். சிவாலய கோஷ்ட மூர்த்தங்களும், உற்சவ மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் அன்னை விசாலாட்சி சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தருகிறாள். கால பைரவர், தாயுமானவர், சேக்கிழார் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அக்னி மூலையில் நவகிரகங்கள் உள்ளன. குரு, பைரவரை நோக்கி இருப்பதும், பைரவர், குருவை பார்த்துக் கொண்டிருப்பதும் விசேஷம் என்பர். வலச்சுற்று வருகையில் அக்னி மூலையில் மூஷிகத்துடன் உள்ள ஜெய விநாயகரை வணங்கி ஆசி பெற்று சுற்றைத் தொடரலாம். அடுத்து மூன்று நீதி விநாயகர்கள் காணப்படுகின்றனர். சுற்றின் முடிவில் உள்ள சந்நிதியில் ஜெயசுப்ரமண்யர் எழுந்தருளியுள்ளார். வள்ளி-தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். வாதாம் மரத்தடியில் சனீஸ்வர பகவான் சந்நிதி கொண்டுள்ளார். கோவிலைச் சுற்றி விருட்சங்கள், மலர் செடிகள் ஆகியன வளர்த்து பராமரிக்கின்றனர். தியான மண்டபம் ஒன்றும் இருக்கின்றது. ஆலயத்துள் நுழைந்ததும் இடதுபுறமாக வேம்புடன் இணைந்த அரசமரம் இருப்பதைக் காணலாம். அதனடியிலுள்ள மேடையில் வலம்புரி விநாயகர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அவரது கண்கள் நம்மையே பார்ப்பது போன்ற தோற்றம். நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன. தினமும் காலை வேளையில் வலம் வரலாம். சோமவார பிரதட்சிணம் விசேஷம். அரசமர பிரதட்சிண ஸ்லோகம்: மூலதோ பிரம்மரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத சிவரூபாய விருக்ஷ ராஜாய தே நம:
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.