அருள்மிகு விஸ்வரூப பக்த ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோவில், மைலாப்பூர்
God Name : பக்த ஆஞ்சநேயஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக பக்த ஆஞ்சநேயஸ்வாமி எழுந்தருளியுள்ளார். 18 அடி உயரம் கொண்ட நெடிந்துயர்ந்த திருமேனி. விஸ்வரூப சேவை சாதிக்கின்றார். கூப்பிய கரங்களுடன் பவ்யமாக காட்சி தருகிறார். கண்கள் இரண்டும் நம்மையே பார்ப்பது போன்ற அமைப்பிலுள்ள அழகான திருவுருவம். யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஹனுமனின் திருவுருவங்கள் சுதை சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. காஞ்சி மஹா பெரியவர், வடுவூர் ராமன் ஆகியோரின் படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன.
பிரதட்சிணம் வரும்போது விஜய கணபதியை சேவிக்கலாம். கோஷ்டத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், சோளிங்க ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம்.
ராமர் சந்நிதியில் ஸ்ரீ கோதண்டராமர், சீதா பிராட்டி, லக்ஷ்மணன் ஆகியோரின் திருவுருவங்கள் மூலவராகவும் உற்சவராகவும் சேவை சாதிக்கின்றனர். எதிரே பெரிய திருவடி (கருடாழ்வார்) எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமான் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
சேவார்த்திகள் பிரார்த்தனை செய்து கொண்டு வெண்ணைக் காப்பு, வடை மாலை சாத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்களைச் செய்கின்றனர். லட்டு, கரும்பு, தேங்காய், பழங்கள், மலர்கள் இவற்றைக் கொண்டு செய்யப்படும் அலங்காரங்கள் பிரமாதமாக இருக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.