அருள்மிகு ஐயப்பஸ்வாமி திருக்கோவில் (ராஜா அண்ணாமலைபுரம்)

God Name : ஸ்ரீ ஐயப்பஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

கோவில் மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. நில மட்டத்திற்கு 22 அடிக்கு மேல் சந்நிதானம் அமைத்துள்ளனர். 40 அடி உயரம் கொண்ட த்வஜஸ்தம்பம் ஒரே மரத்தில் உருவானது. கொடி மரத்தின் கீழ் அஷ்டதிக் பாலகர்களின் உலோகத் திருமேனிகள் காணப்படுகின்றன. கேரள பாணியில் உருவாக்கப்பட்ட ஆலயம். 'வடசபரி' என்றே போற்றுகின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஐயப்பஸ்வாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். ஐம்பொன்னால் உருவான திருமேனி. ஜெகஜ்யோதியாக ஒளி வீசும் அழகிய மூர்த்தம். கன்னி மூல கணபதி, நாகராஜா ஆகியோரை தரிசித்து வலம் வருகையில், மற்றோர் படிகள் வழி சென்றால் மாளிகைபுரத்து மஞ்ச மாதாவை தரிசிக்கலாம். சபரிமலையில் இருப்பது போலவே இங்கும் பதினெட்டாம்படிகள் இருக்கின்றன. அதன் இருபுறமும் கருப்பர், கருப்பாயி மற்றும் பெரிய கருப்பசாமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். விரதமிருந்து இருமுடி கட்டி வரும் சபரி பக்தர்கள் இந்த பதினெட்டாம்படி வழியாக ஏறிச் சென்று தரிசனம் செய்கின்றனர். மற்ற பக்தர்களுக்கு தனி வழி உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.