அருள்மிகு ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலயம், மத்ய கைலாஷ் (தரமணி)

God Name : ஸ்ரீ ஆனந்த விநாயகர் மற்றும் ஸ்ரீ ஆத்யந்த மஹா பிரபு

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இந்த ஆலயத்திலுள்ள விக்ரகங்கள் அனைத்தும் திருப்பதி தேவஸ்தானத்தினரால் வழங்கப்பட்டதாக குறிப்பு ஒன்று கூறுகிறது. வடக்கே உத்தர் கைலாஷ் எனப்படும் காசி க்ஷேத்ரம், தெற்கே தக்ஷிண் கைலாஷ் எனப்படும் இராமேஸ்வர க்ஷேத்ரம் ஆகிய ஸ்தலங்கள், பித்ரு காரியங்களுக்கான ஸ்தலங்கள் என்பதால், இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் இத்தலம் மத்ய கைலாஷ் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீ ஆனந்த விநாயகரைக் கர்த்தாவாகக் கொண்டு பித்ரு கடன் செய்து வைக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வேங்கட ஆனந்த விநாயகர் நடுநாயகமாக சந்நிதி கொண்டு எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். விநாயக சதுர்த்தியன்று இவரது திருமேனி மீது சூரிய கிரணங்கள் படர்ந்து சூரிய பூஜை செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. இவரது சந்நிதியில், அறுபடை வீடுகளில் கோவில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் ஒரு பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஆத்யந்த மஹா பிரபு விசேஷமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ஆனந்த விநாயகரும், ஸ்ரீ ஆஞ்சநேயரும் இணைந்த அற்புதமான எழில் வடிவம். ஆதி என்பது ஆரம்பத்தையும், அந்தம் என்பது முடிவையும் குறிக்கும். ஸ்ரீ பரமேஸ்வரன் எழுந்தருளி அருள் புரியும் சந்நிதியில் ஸ்ரீ ஆதி சங்கரரும் காணப்படுகிறார். ஸ்ரீ அபிராமி அன்னை அருள் பாலிக்கும் சந்நிதியில் அபிராம பட்டரை தரிசிக்கலாம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் காணப்படும் ஆதித்யன் எனப்படும் சூரியனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. மஹாவிஷ்ணு சந்நிதியில் ஸ்ரீ ராமாநுஜரையும், ஆழ்வாராதிகளையும் சேவிக்கலாம். ஆஞ்சநேயர் சந்நிதியில் ஸ்ரீ மாத்வாச்சார்யாரை சேவிக்கலாம். சுகபிரம்ம ரிஷி, பரவாசுதேவர், பிரம்மன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஸ்வர்ண பைரவர், அபிராமி, ராஜகோபால ஸ்வாமி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.