அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில் (வேளச்சேரி)
God Name : ஸ்ரீ தண்டீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
நான்கு வேதங்களும் இத்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை வழிபட்டு, தங்களது தோஷங்களைப் போக்கிக் கொண்டன. இதனால் சதுர்மங்களம் என்ற பெயரைக் கொண்டது இவ்வூர். முன்நாளில் தொடர்ந்து பல வேள்விகள் செய்து கொண்டிருந்தனராம். இதனால் வேத ஸ்ரேணி எனப் பெயருற்று பின்னர் வேள்விச்சேரி என அழைக்கப்பட்டு, நாளடைவில் வேளச்சேரி என்றானது.
மார்க்கண்டேயன் விஷயத்தில் செய்த தவற்றினால் சிவ அபராதத்திற்குட்பட்ட யமதர்மராஜன் இங்கு வந்து தீர்த்தம் ஒன்றை அமைத்து பலகாலம் தவமிருந்து இறைவன் அருள் பெற்றான். யமனின் தண்டத்தை சிவபெருமான் வைத்திருந்ததால் தண்டீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
அசுரனை சம்ஹாரம் செய்து தோஷம் கொண்ட சப்த கன்னியர்கள் இவ்விறைவனை வேண்டி தோஷங்கள் நீங்கப் பெற்றனர். அவர்களுக்கு துணையாக வந்தவரே இங்குள்ள வீரபத்ரர் எனக் கூறுவர்.
அப்பய்ய தீட்சிதர் இத்தலத்திற்கு வந்து தமது கரங்களால் குளம் ஒன்றை அமைத்து, இவ்விறைவனை வழிபட்டுள்ளதாக குறிப்பொன்று கூறுகிறது. 1055 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் எனக் கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ தண்டீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ கருணாம்பிகா.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ தண்டீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். மகர சங்கராந்தியன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கருணாம்பிகா அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அப்பய்ய தீட்சிதர் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
பிரகார வலச்சுற்றில் வேத விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். சுப்ரமண்யர், சந்திரசேகரர், சூரிய பகவான், சரஸ்வதி-துர்க்கை-மஹாலட்சுமி, சோமாஸ்கந்தர், ஸ்ரீ மீனாட்சி உடனுறை சொக்கநாதர், வைத்தீஸ்வரர், பிரம்மா, சப்த கன்னிகள், யமதர்மராஜன், நவகிரகங்கள் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
இத்தலத்திலுள்ள வீரபத்ரர் மான், மழு மற்றும் ருத்ராட்ச மாலை கொண்டு அமர்ந்த கோலத்தில் காணப்படுவதும், நந்தியம் பெருமான் தலையை கீழே சாய்த்தவாறு பணிவாக காணப்படுவதும் விசேஷமான ஒன்று. யோக தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
திருக்கடையூர் செல்ல முடியாதவர்கள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை இங்கு செய்து கொள்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.