அருள்மிகு ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமி திருக்கோவில் (அடையாறு)

God Name : ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இஷ்டசித்தி விநாயகரை வணங்கி ஆசி பெற்று ஆலயத்துள் செல்கின்றனர். அமெரிக்கன் டைமண்ட் பதித்த வெள்ளிக் கவசத்தில் ஜொலிக்கின்றார். சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்கின்றனர். மூன்று வாசல்களைக் கொண்ட மூலஸ்தானம், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவிலை பிரதிபலிக்கின்றது. திருமுகம் - நாபி - திருவடிகள் என்ற முறையில் சேவிக்க வேண்டும். மூலவராக ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமி அனந்தன் எனும் ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் காட்சி தருகின்றார். அனந்த போக சயனம் என்பார்கள். தாமரைப்பூ போன்ற நாபியிலிருந்து பிரம்மா தோன்றி தரிசனம் தருகின்றார். ஸ்வாமியின் வலது கரம் சிவலிங்கத்தை ஸ்பர்ஸித்துக் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ப்ருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பின்பக்க சுவரில் அனைத்து தேவர்களுடன் அமைந்துள்ள சிலாவிக்ரஹ ரூபம். மும்மூர்த்திகளையும் ஒரு சேர சேவித்த மகிழ்ச்சி கிடைக்கின்றது. வெள்ளிக்கிழமை நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்களில் மூலவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். தனி சந்நிதி கொண்டுள்ள பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வாருக்கு விசேஷ ஆராதனைகள் மாதந்தோறும் செய்கின்றனர். மந்திரம் ஜெபிக்கப்பட்ட கருட ரட்சைக் கயிற்றினை சேவார்த்திகளுக்கு கொடுக்கின்றனர். ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ அஷ்டாதசபுஜ துர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். நவகிரகங்களும் சந்நிதி கொண்டுள்ளனர். சனீஸ்வரருக்கு சனிக்கிழமை நாட்களில் மாலை நேரங்களில் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.