அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில் (அடையாறு)

God Name : ஸ்ரீ மஹா விஷ்ணு

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இக்கோவில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல் தளம் என மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. வங்கக்கடலை நோக்கி அமைந்த புண்ய க்ஷேத்ரம். கீழ்த்தளத்திலுள்ள மூலஸ்தானத்தில் மூலவராக மஹாவிஷ்ணு கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு ஏழடி உயரம் கொண்ட அழகு திருமேனியுடன் ஆஜானுபாகுவாக தோற்றம் கொண்டு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தாயார் மஹாலட்சுமி சர்வாபரண பூஷிதையாக தரிசனம் தருகின்றாள். திருமணக் கோல தரிசனம் பார்க்க ஆனந்தமாயுள்ளது. சங்கநிதி - பத்மநிதி இரண்டு பக்கங்களிலும் காட்சி தருகின்றனர். மற்ற லட்சுமிகளை தரிசனம் செய்ய பதினெட்டு படிகள் அமைத்துள்ளனர். முதல் தளத்தில் கிழக்கில் கஜலட்சுமி, தெற்கே சந்தான லட்சுமி, மேற்கே விஜய லட்சுமி, வடக்கே வித்யா லட்சுமி ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். சற்று மேலே தனலட்சுமி எழுந்தருளியுள்ளார். மண்டபத்திலிருந்து கீழிறங்கி வருகையில் தெற்கே ஆதி லட்சுமியையும், மேற்கே தான்ய லட்சுமியையும், வடக்கே தைர்ய லட்சுமியையும் சேவிக்கலாம். கமல விநாயகர், குருவாயூரப்பன், தன்வந்த்ரி, சக்கரத்தாழ்வார்- நரசிம்மன், தசாவதார மூர்த்திகள், பெரிய திருவடி, சிறிய திருவடி ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். இவ்வாலயத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய விருட்சங்களை வளர்த்து பராமரிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.