அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில் (திருவான்மியூர்)
God Name : மருந்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
தேவார காலத்தில் வான்மீகநாதர் ஆலயம் எனப் பெயருற்றிருந்தது. வான்மீக முனிவர் வழிபட்டதால் வான்மியூர் என இவ்வூர் பெயர் கொண்டதாக கூறுவர்.
அகஸ்திய முனிவருக்கு, இவ்விறைவன், பிணிகளுக்கு தீர்வு காணும் மூலிகை மருந்துகளைப் பற்றி உபதேசித்துள்ளார். இதனால் மருந்தீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. வான்மீகி வழிபட்டதால் வான்மீகநாதர் என்றும், அமுதத்தால் தேவர்கள் அபிஷேகம் செய்ததால் அமுதேசர் என்றும், நான்கு வேதங்களும் பூஜித்ததால் வேதபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் வந்தன. காமதேனுப் பசு தினமும் பாலபிஷேகம் செய்து வழிபட்டதால் பால் வண்ண நாதர் என்ற பெயரைக் கொண்டார்.
வான்மீக முனிவர் இத்தலத்தில் அமர்ந்து நீண்ட தவம் மேற்கொண்டார். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தன்று, முனிவர்க்கு இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவலிங்க ஸ்வரூபமாக காட்சி தந்தார் இறைவன். கமலத்தியாகர் நடனத்தையும் அருளச் செய்தார்.
மகரிஷி ஒருவரின் சாபத்திற்காளான காமதேனு ஒரு காட்டுப் பசுவாக மாறி திரிந்து கொண்டிருந்தது. புதரினூடே இருந்த லிங்கத்திற்கு தனது மடியில் இருந்த பாலால் தினமும் அபிஷேகம் செய்து வந்தது. தன்னை தாக்க வந்த வேடன் ஒருவனுடனும், வேட்டையாடிக் கொண்டிருந்த அரசனுடனும் போராட நேரிட்டபோது, காமதேனுப் பசுவின் கால் குளம்புகள் சிவலிங்கத்தின் மீது பதிந்ததால் வருத்தமுற்ற காமதேனுவை, வாத்ஸல்யத்தோடு அனுக்ரஹித்தார் இறைவன் என ஸ்தல புராணம் கூறுகிறது.
சிவபெருமானின் ஜடாமுடியிலுள்ள கங்கையிலிருந்து தெளித்த ஐந்து துளிகளே இங்கு ஐந்து தீர்த்தங்களாக உள்ளன. அவை கிழக்கில் ஜென்மநாசினி, தெற்கில் காமநாசினி, மேற்கில் பாபநாசினி, வடக்கில் ஞானதாயினி, நடுவில் மோட்சதாயினி என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்திரனும், குரங்கு ஒன்றும் ஜென்மநாசினி தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து நற்பலன்கள் பெற்றுள்ளனர். அர்ச்சுணன் பாபநாசினி தீர்த்தத்தில் மூழ்கி இவ்விறைவனை வழிபட்டுள்ளான். குரு பத்தினியைத் தீண்டி சாபம் கொண்ட சந்திரன் இங்குள்ள காமநாசினியில் மூழ்கி நற்கதி அடைந்தான்.
அம்பாள் சந்நிதிக்கு எதிரிலுள்ள கிணற்றை மோட்சதாயினி என்பர். இந்த நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
வடபுறமாக ஸ்தல விருட்சம் வன்னிமரம் இருக்கின்றது. மார்க்கண்டேயருக்கு வன்னி மரத்தடியில் ரிஷபாரூடராக இறைவன் காட்சி அளித்துள்ளார். பிருங்கி மகரிஷி இவ்விறைவனை வழிபட்டுள்ளார்.
தேவாரம் திருத்தலம்.
மூலவர்: மருந்தீஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மருந்தீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். வடக்கே சற்று சாய்ந்த நிலையில் தரிசனம் தருகின்றார். பசுவின் கால் குளம்பு பட்ட வடுக்கள் திருமேனியில் காணப்படுகின்றன. மேற்கு பார்த்த சந்நிதி. சூரியனின் பூஜையை ஏற்கவே, இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு வான்மீக நாதர், பால் வண்ண நாதர், அமுதேசர், வேதபுரீஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. மருந்தீஸ்வரரை வடமொழியில் ஔஷதீஸ்வரர் என்றும் அழைப்பர்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் மற்றும் அப்பைய தீட்சிதரின் திருவுருவத்தை தரிசிக்கலாம். மண்டபத்தின் கிழக்கு பகுதியில் கேதாரேஸ்வரர், ராமநாதேஸ்வரர், சுந்தரேசர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் ஆகிய பஞ்ச லிங்க தரிசனம் கிடைக்கின்றது. தீபாவளியன்று கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் கேதாரேஸ்வரரை பூஜிக்கின்றனர்.
கிழக்கு பார்த்த ராஜகோபுரம் கடந்து சென்றால் விஜய கணபதியை தரிசித்து ஆசி பெறலாம். விமானத்தை சுற்றி 32 விநாயகர்கள் சுதை சிற்பங்களாக இடம் பெற்றுள்ளனர். அடுத்த சந்நிதியில் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமானை தரிசிக்கலாம்.
கிழக்கு கோபுரத்தின் அருகே தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பாசம்-அங்குசம், அபய-வரத முத்திரைகள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. சொக்க நாயகி என்ற திருநாமமும் உண்டு. எதிரே சிம்ம வாகனம் நிற்கிறது. ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர். உற்சவ அம்பாளின் திருவுருவமும், சுக்ரவார அம்மனின் திருவுருவமும் அழகாக இருக்கின்றன.
தெற்கு சுற்றில் தியாகராஜர் சபா மண்டபத்தில் கமலத் தியாகர் எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகிய உலோகத் திருமேனி. (சப்த விடங்க ஸ்தல தியாகர்கள் வரிசையில் இல்லாதவர்). மடைப்பள்ளியை அடுத்துள்ள சந்நிதியில் வித்தியாசமாக மூன்று பிள்ளையார்கள் காணப்படுகின்றனர். ஒண்டி மரப் பிள்ளையார் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.