அருள்மிகு ஸ்ரீ ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோவில் (தென்னாங்கூர்)
God Name : ஸ்ரீ பாண்டுரங்கன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி ஜெகந்நாதர் ஆலய அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் அமையப்பெற்ற கோபுரமும், வட இந்தியக் கோவிலை போன்ற அமைப்பும், பண்டரிபுர மூலவரின் தோற்றத்தில் இங்குள்ள மூலவரின் தோற்றமும் கொண்ட ஸ்தலம். ஸ்ரீ ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் - நாம சங்கீர்த்தன மண்டலி ஒன்று உருவாக்கி, பக்தி மார்க்கத்தை பரப்ப, க்ஷேத்ராடனம் மேற்கொண்டார். வழியில் பாண்டுரங்கனை தரிசிக்க பண்டரிபுரம் சென்றார். பண்டரிபுரத்து பண்டா (அர்ச்சகர்) தமது கனவில் பாண்டுரங்கன் தோன்றி, இந்த விக்ரஹத்தை உங்களுக்கு தரச் சொன்னார் எனக் கூறி பாண்டுரங்கனின் விக்ரஹத்தை, ஹரிதாஸ் ஸ்வாமிகளிடம் தந்தார். விக்ரஹம் கிடைத்த மகிழ்ச்சியில், தனது பிறந்த ஊரான தென்னாங்கூரில், ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஸ்வாமிகளுக்கு ஏற்பட்டது. இவரது தலைமை சீடரான ஸ்ரீ ராமாநந்த கிரி ஸ்வாமிகள், ஆலயத்தை நடத்தி வருகின்றார். பண்டரிபுரம் போலவே ஜூன்/ஜூலை சமயத்தில் பக்தோத்ஸவம் 5 நாட்களுக்கு நடைபெறும். காலையில் பஜனையும், மாலையில் ஸ்வாமி புறப்பாடும் நடைபெறும்.
மூலவர்: ஸ்ரீ பாண்டுரங்கன், தாயார்: ஸ்ரீ ரகுமாயி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன், விஸ்வரூப தரிசனம் தருகின்றார். பண்டரிபுரத்து மூலவரைப் போன்றே தோற்றம். பத்தரை அடி உயரமும், எட்டரை அடி உயரமும் கொண்ட அழகிய திருமேனிகள். உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ தேவி பூ தேவி சமேத வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். பேரெழிலுடன் விளங்கும் பஞ்சலோக விக்ரஹங்கள். முன்புற மண்டபத்திலிருந்தே பாண்டுரங்கனை சேவிக்கும் வகையில் கருவறையின் அமைப்பு உள்ளது. அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட பதினாறு கால் மண்டபம், அதையடுத்துள்ள மஹா மண்டபத்தில், கண்ணாடி இழைகள் (பைபர் க்ளாஸ்) கொண்டு, பல கோடி ரூபாய் செலவில் உருவான கிருஷ்ணலீலா ஓவியங்கள் பார்க்க பிரம்மிப்பூட்டுகின்றன. மூலவர்க்கு - குடை, சுருட்டி, ராஜ சாமரம், ஆதர்சம் (கண்ணாடி) ஆகிய சதுர்வேத மந்திரோபசாரம் காண்பித்து, திராவிடம் சொல்லி, திரு ஆலவட்டம் சுழற்றுகின்றனர். மந்திரங்களை நிதானமாகவும், தெளிவாகவும் உச்சரிக்கும் பட்டாச்சார்யர்கள், கோவிலைப் பற்றியும், பாண்டுரங்கனைப் பற்றியும் விவரிக்கின்றனர். இங்கு பிரதானமாக இருப்பது நாமசங்கீர்த்தன வழிபாடு. கோவிலுக்குள் மேல்சட்டை அணிந்துகொண்டு போக அனுமதியில்லை. வியாழக்கிழமையில் நிஜபாத தரிசனம் (அலங்காரங்கள் ஏதும் மறைக்காது), வெள்ளிக்கிழமையன்று வெள்ளிக் கவசம் அணிந்து காட்சி, சனிக்கிழமையன்று திருப்பதி ஏழுமலையான் வடிவில் தரிசனம், ஞாயிற்றுக்கிழமையன்று தலைப்பாகையும் வீரவாளும் கொண்டு ராஜ அலங்காரம் என்று தினம் தினம் ஒரு வித அலங்காரம். சுப்ரபாத தரிசனம் - விஸ்வரூபம் காலை 6.00 மணி, உச்சி கால ஆராதனை - ராஜ் போக் முற்பகல் 11.45 மணி, பங்கள ஆரத்தி மாலை 4.00 மணி, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை முன்னிரவு 7.00 மணி, கோஷ்டி 7.30 மணி. தினமும் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ருக்மணி கல்யாண உற்சவம் சேவார்த்திகளுக்காக நடத்தப்படுகின்றது. பிள்ளைப்பேறு வேண்டி பிரதக்ஷிணம் செய்ய ஒரு ஸ்தல விருட்சம் உள்ளது. (தமால மரம்)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.