அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (தென்னாங்கூர்)
God Name : சுந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஆற்காடு முதல் திண்டிவனம் வரை தொடர்ச்சியாக ஆறு காடுகள் முற்காலத்தில் இருந்தமையால், இது ஷடாரண்ய க்ஷேத்திரம் என்றழைக்கப்பட்டது. இதன் நடுவேயுள்ள தென்னாங்கூரில், ஒரு பாண்டிய மன்னன் சப்த ரிஷிகளின் துணைகொண்டு புத்ரகாமேஷ்டி யாகம் செய்தான். யாகத்தின் பலனாக, மூன்று வயது குழந்தையாக மீனாட்சி தோன்றிய ஸ்தலம் இதுவென தல வரலாறு கூறுகிறது. பாண்டுரங்கனுக்கு கோவில் எழுப்ப தீர்மானித்த ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளும், சேஷாத்ரி ஸ்வாமிகளும் காஞ்சி மஹா பெரியவாளிடம் யோசனை கேட்டனர். மீனாட்சி இங்கு தோன்றியதைப் பற்றியும், தென்னாங்கூரின் பெருமைகளையும் அவர் விவரமாக எடுத்துரைத்தார். மேலும், மீனாட்சி கோவில் ஒன்றும் கட்டுமாறும் யோசனை தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. பிரதோஷ தினங்களில் பிரதோஷ வழிபாடு, நவக்கிரக பூஜை ஆகியன நடத்தப்படுகின்றன.
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: மீனாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் சுந்தரேஸ்வரர். அழகிய தேஜோமய லிங்கம். அன்னை மீனாட்சி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஞான விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய ஞானஸ்கந்தர், துல்ஜா பவானி ஆகிய மூர்த்தங்கள் தனி சந்நிதி கொண்டுள்ளனர். நவக்கிரகங்கள் தத்தம் துணைவிகளுடனும் வாகனங்களுடனும் காட்சி தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.