அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் (நெடுங்குணம்)
God Name : மூலவர்: யோக ராமர் - உற்சவர்: விஜயராகவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
இத்தலத்தில் தவம் புரிந்து கொண்டிருக்கும் சுகபிரம்மரிஷியின் ஆஸ்ரமத்திற்கு, ராவண வதம் முடித்து அயோத்தி திரும்புகையில், வருவதாக கூறிச் சென்ற ராமர், அவசரமாக அயோத்தி சென்று, பரதனை காப்பாற்ற வேண்டி இருந்தும், கொடுத்த வாக்கின்படி, இங்கு வந்ததை, ராமனின் உயர்ந்த குணம் (அதாவது நெடுங்குணம்) என்கிறார் சுகபிரம்மரிஷி. இதனால் இவ்வூருக்கு நெடுங்குணம் எனப் பெயர் வந்தது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ யோக ராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இடது காலை மடித்து, அதன் மீது வலது காலை வைத்துள்ளார். இடது கரத்தை இடது முழங்காலில் ஊன்றியுள்ளார். வலது கரத்தால் ஞானமுத்திரை காட்டி, மார்பில் வைத்த வண்ணம் காட்சி தருகின்றார். வில் இல்லாத ராமர். வேறு எங்கும் காண முடியாத அபூர்வ கோலம். அருகே வீராசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் சீதா தேவி, வலப்புறமாக லக்ஷ்மணன், தோளில் வில் சுமந்து, கூப்பிய கரங்களுடன் நின்ற கோலம். ஹனுமன் தரையில் அமர்ந்து, கரங்களில் பற்றியுள்ள சுவடிகளை வாசிக்கும் பாவனையில் காட்சி. உற்சவ மூர்த்திகளாக விஜயராகவப் பெருமாள் - ஸ்ரீநிவாசப் பெருமாள் இருவரும் சேவை சாதிக்கின்றனர். தனிக் கோவில் தாயாராக செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். கருடாழ்வார், ஆழ்வாராதிகள், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீசுதர்ஸனர், வெங்கடேசர், வைகானஸர் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம். ஆஞ்சநேயர் சந்நிதியில் இரண்டு மூலவர்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.