அருள்மிகு திருமணிச்சேறை உடையார் ஆலயம் (இஞ்சிமேடு)

God Name : திருமணிச்சேறை உடையார்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

அடிமுடி தேடி புறப்பட்ட விஷ்ணுவும், பிரம்மனும் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கையில் சோர்வுற்ற பிரம்மன், தாழம்பூவை பொய் சாட்சியாக துணை நிற்க வேண்டுகிறார். தாழம்பூவும் அவ்வாறே பொய் சொல்கிறது. இதனால் கோபமுற்ற ஈசன், பிரம்மாவையும் தாழம்பூவையும் சபித்து விடுகிறார். வழிபாட்டிற்கு பயன் இல்லாமல் போகும் சாபத்தைக் கொண்ட தாழம்பூ, சாப விமோசனம் வேண்டியது. இத்தலத்தில் கலியுகம் முழுவதும் தவம் இருக்குமாறு பணித்தார் ஈசன். அதன்படி தாழை மரம் இங்கு தவம் புரிகின்றது என ஸ்தல வரலாறு.
மூலவர்: திருமணிச்சேறை உடையார், அம்பாள்: திருமணி நாயகி. 200 அடி உயரமும், 51 படிக்கட்டுக்களும் கொண்ட சிறிய மலை மீது எழுப்பப்பட்ட ஆலயம். 700 வருஷங்களுக்கு முற்பட்டது என்பர். படியேறும் பக்தர்களின் வசதிக்காக மேற்கூரை போடப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் விநாயகரையும் நவக்ரஹங்களையும் தரிசிக்கலாம். மலைப்பாதையில் சங்கு வடிவத்திலுள்ள சங்கு தீர்த்தம், விருட்சங்கள், நாகப் பிரதிஷ்டைகள் ஆகியவற்றைக் காணலாம். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் திருமணிச்சேறை உடையார். உயரமான பாணத்துடன் கூடிய அழகிய லிங்கம். பஞ்சநாகம் குடை பிடிக்க, கம்பீரமாக அமர்ந்த லிங்கம். ஐந்தரை அடி உயரமுள்ள திருமேனி. நவபாஷாணம் கொண்டு உருவாக்கிய தேஜோமய லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. அகஸ்தியர் வழிபட்ட லிங்கம். தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் திருமணி நாயகி எழுந்தருளி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. பிரகாரத்தில் வெள்ளை பளிங்கு திருவுருவமாக சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். பெரிய குகை ஒன்று உள்ளது. அதில் பாம்பு உருவில் பாம்பாட்டி சித்தர் இருப்பதாக கூறுவர். இங்குள்ள சுனைப்பகுதியை நாகம் ஒன்று காவல் காப்பதாக கூறுகின்றனர். பாம்பு கடிக்கு மருந்தாக இந்த சுனை தீர்த்தத்தை பயன்படுத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.