அருள்மிகு நவ நரசிம்மர் திருக்கோவில் (ஆவணியாபுரம்)

God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

'ஆவணி' என்றால் 'சிம்மம்' என்று அர்த்தம். சிம்ம முகத்துடன் மூலவரும் தாயாரும் இருப்பதால் 'ஆவணி நாராயணபுரம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் 'ஆவணியாபுரம்' என்றானது. நவ நரசிம்மர்களையும் தரிசிக்கும் வாய்ப்பு இருப்பதால் 'தட்சிண அஹோபிலம்' என்றழைக்கப்படுகிறது.
தட்சிண அஹோபிலம் எனப் போற்றப்படும் இந்த நவ நரசிம்மர் கோவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் அடுக்குக்குச் செல்ல 70 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இது ஒரு குடைவரைக் கோவில். நுழைவாசலில் ஹனுமனின் பெரிய திருமேனியைத் தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மிகப் பெரிய திருமேனியுடன் கம்பீரமாக அமர்ந்துள்ளார். மடியில் அமர்ந்துள்ள லட்சுமியைத் தனது இடது கரத்தால் அணைத்தபடியும், வலது கரம் அபய ஹஸ்தமாக கொண்டும், மேற்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் காட்சியளிக்கின்றார். அதன் முன்பு மற்றொரு திவ்ய வடிவமாக தாயார் சேவை சாதிக்கின்றார். தாயாருக்கு சிங்கமுகம் இருப்பது அதிசயம். சிங்க முகத்துடன் இருக்கும் உற்சவ மூர்த்தியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பிருகு மகரிஷிக்காகக் காட்டியருளிய ஐந்து நரசிம்மர்களும் வலச்சுற்றில் வரிசையாக சேவை சாதிக்கின்றனர். காஞ்சி, ஸ்ரீரங்கம், அந்திலி, திருமலை, அஹோபிலம் ஆகிய ஐந்து ஸ்தலங்களைச் சேர்ந்த நரசிம்மர்கள் சேவை சாதிக்கின்றனர். பிரகாரத்திலுள்ள சோளிங்கர் நரசிம்மரையும், அஹோபிலத்து நவ நரசிம்மர்களையும் தரிசித்து மகிழலாம். கருடாழ்வார், ஆதிசேஷன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆகியோரைத் தரிசித்துக் கொண்டு பிரகாரம் வந்தால் பாம்பணையில் சயனித்துள்ள ஸ்ரீ ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் தரிசிக்கலாம். பெருந்தேவி தாயார் உடனாய வரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. மேலும் 110 படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால் வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.