அருள்மிகு இளம்பிறை நாயனார் திருக்கோவில் (காமக்கூர்)
God Name : ஸ்ரீ சந்திரசேகரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்தல வரலாறு: திருக்குறுக்கை ஸ்தலத்தில் ஈசனால் எரிக்கப்பட்ட காமனை இழந்த ரதி தேவி இத்தலம் வந்து இடைவிடாது இறைவனை வழிபட்டு காமனைத் திருப்பித் தர வேண்டுகிறாள். அமிர்தாம்பிகையுடன் பிரத்யட்சமான ஈசன் காமனை ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படியான வரத்தை அளிக்கின்றார். அதனால் இத்தலம் காமாத்தூர் எனப் பெயர் கொண்டது. ரோஹிணியை தவிர மற்ற 26 நட்சத்திர மனைவிகளிடம் பிரியம் இல்லாமலிருந்த சந்திரனை அவனது கலைகளையும் அழகையும் இழக்குமாறு சபித்து விடுகிறான் தட்சன். சாப விமோசனம் வேண்டி இவ்வூர் வந்த சந்திரன் தீர்த்தம் ஒன்று உண்டாக்கி இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெறுகிறான். சந்திரனை தனது தலையில் சூடி அருளியதால் இறைவனுக்கு இளம்பிறை நாயனார் என்ற பெயர் வந்தது. ஸ்தல வரலாறு தொடர்பான சிற்பங்களை மூலவரின் விமானத்தில் வடித்துள்ளனர்.
மூலஸ்தானத்தில் தேஜோமய சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஸ்ரீசந்திரசேகரர். சுயம்பு மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. இவருக்கு இளம்பிறை நாயனார் என்ற பெயரும் உண்டு. இரண்டு அம்பிகைகள் - தெற்கு பார்த்த சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ அமிர்தாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். கிழக்கு பார்த்த சந்நிதியில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். திரிபுரசுந்தரி திருவடிகளருகே ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சக்தி விநாயகர், ஷண்முகர், சகஸ்ர லிங்கம், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தங்களுள் சதுரதாண்டவம் புரியும் நடராஜர், கை கூப்பி வணங்கிய நிலையில் அதிகார நந்தி ஆகியன பேரெழில் கொண்டவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.