அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் (தேவிகாபுரம்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரளய காலத்தில் பார்வதி தேவி இங்கு வந்தபோது, பொன்மலை ஒன்று மிதந்து வரக் கண்டாள். பொன்மலை இங்கு நின்றதும், அதனடிவாரத்தில் அமர்ந்து, தவம் புரிந்து ஈசனை வழிபட்டாள் என்றும் ஈசன் சுயம்பு லிங்கமாக பிரத்யட்சமானார் என்றும் ஸ்தல வரலாறு. மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்த இடத்தில் தேவியின் திருவடியை காணலாம்.
உச்ரசேனன் எனும் மன்னன் புத்ரபாக்கியம் வேண்டி தவம் மேற்கொண்டான் எனவும் தேவியின் அருளால் பெண் குழந்தை ஒன்று பிறந்தது எனவும், அக்குழந்தைக்கு தேவிகா எனப் பெயரிட்டதாகவும், அதனால் இவ்வு+ர் தேவிகாபுரம் எனப் பெயர் கொண்டதாகவும் குறிப்பொன்று கூறுகிறது.
சக்தி ஸ்தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.
ஊரின் நடுவே அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் கோவில். ஏழு நிலை கோபுரத்தின் பிரதான வாசல் வழியே உள்ளே சென்றால் திருக்குளமும், கல்யாண மண்டபமும் காணலாம். குதிரைகள் இரண்டு இழுத்துச் செல்லும் அமைப்பில் உள்ளது கல்யாண மண்டபம். நுழைவாயிலிலும், கல்யாண மண்டபத் தூண்களிலும், முப்பத்தாறு தூண்களையுடைய மண்டபத்திலும் பல அரிதான சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தில் பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. அரபத்ரா - சுபத்ரா எனும் துவார பாலகியர்கள் சந்நிதியின் வாசலில் உள்ளனர். எதிரே நந்தி வாகனம்.
கொடிமரத்தருகே விநாயகரையும் முருகனையும் தரிசிக்கலாம். நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்திகள் அழகாக இருக்கின்றனர்.
கோட்டை மதிற்சுவர்கள் கொண்ட பெரிய கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.