அருள்மிகு பொன்மலைநாதர் திருக்கோவில் (தேவிகாபுரம்)

God Name : கனககிரீஸ்வரர் எனப்படும் பொன்மலைநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

இங்குள்ள பிரதிஷ்டா லிங்கம், தேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அருகேயுள்ள சுயம்பு லிங்கம், இறைவன் சுயம்புவாக தோன்றியது - எனச் ஸ்தல வரலாறு. பல்லவ மன்னன் ஒருவன் தனது வேண்டுதல் நிறைவேறியதும், கோவில் கட்டுவதாக கூறி, அதை மறந்துவிட்டான். ஞாபகம் வந்து செயலில் இறங்கும்போது, ஈசன் லிங்கத் திருமேனியை மறைத்து விட்டார். காசியிலிருந்து லிங்கம் ஒன்றை வரவழைத்தான் அரசன். அதை பிரதிஷ்டை செய்யும் வேளையில், மறைந்த லிங்கம் மீண்டும் வந்தது. ஆகவே இங்கு இரண்டு லிங்கத் திருமேனிகள் இருக்கின்றன. என செவி வழிக் கதை ஒன்றும் நிலவுகிறது. கிருஷ்ணதேவராயர் பிறந்த ஊர். பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்ற ஊர்.
கனககிரி எனப்படும் பொன்மலை 500 அடி உயரமும், 5 கி.மி. சுற்றளவும் கொண்டு நிற்கிறது. ஏறிச் செல்ல 302 படிக்கட்டுக்களையும் கொண்டது. இந்த மலை மீது அமைந்துள்ளது கனககிரீஸ்வரர் கோவில். மலையின் ஒரு பகுதியில் வலப்பக்கமாக உள்ள ஆலயத்தில் வீரபத்ரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். மிகவும் அழகான திருவுருவம். மலை மீதுள்ள கோவிலின் மூலஸ்தானத்தில் மூலவராக கனககிரீஸ்வரர் எனப்படும் பொன்மலைநாதர் எழுந்தருளியுள்ளார். வாழைப்பூ போன்ற வடிவத்தில் சுயம்புவாக தோன்றிய அழகான சிவலிங்கம். காலை 8.00 மணிக்கு தினமும், கனககிரீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்து பின்னர் வெந்நீர் அபிஷேகம் செய்கின்றனர். அருகே தேவி வழிபட்ட காசி விஸ்வநாதர் லிங்க வடிவிலும், ருத்ராட்ச லிங்கமும் தரிசனம் தருகின்றனர். பல அரிய சிற்பங்களை கொண்டுள்ள கோவில். மண்டபத் தூண் ஒன்றில் பதினொரு பெண் உருவங்களால் வடிக்கப்பட்ட யானையின் வடிவம் அற்புதமாக இருக்கின்றது. பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், சப்த மாதர்கள், அகோர வீரபத்ரர் ஆகியோரை தரிசிக்கலாம். 3.5 கி.மி சுற்றளவில் மலையை கிரிவலம் வருகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.