அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் (மேல் சேவூர்)
God Name : ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
துர்வாசரின் கோபத்திற்காளாகி சாபம் பெற்ற சண்டிகேஸ்வரர், கமல முனிவராக அவதரித்து இத்தலத்திற்கு வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். காலப்போக்கில் புற்று வளர்ந்து லிங்கத்தை மூடிவிட்டது. நந்தியம் பெருமான் இந்த புற்றை கிளரவே ரத்தம் வெளிப்பட்டது. சங்கராபரணி ஆறாக ஓடி வந்த கங்கை லிங்கத்தை புற்றிலிருந்து வெளிப்படச் செய்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. சங்கராபரணி ஆற்றின் வெள்ளத்தை மங்களாம்பிகை தனது பாதங்களால் தடுத்து நிறுத்தியதாகவும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
இக்கோவில் கி.பி. 928ல் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
மூலவர்: ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர், அம்பாள்: மங்களாம்பிகை.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி. அன்னை மங்களாம்பிகை தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
அதிகார நந்தி, விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாய முருகப் பெருமான், நால்வர், நவகிரகங்கள், சஹஸ்ரலிங்கம், காசி விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.