அருள்மிகு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவில் (தீவனூர்)

God Name : பொய்யாமொழி விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

ஆடு மேய்க்கும் சிறுவர்கள் குளத்தில் இறங்கிக் குளிக்கும்போது, குறிப்பிட்ட ஓரிடத்தில் நீர்க்குமிழிகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆவல் மேலீட்டால், சிறுவர்கள் நீரில் மூழ்கித் தேடியபோது, வழவழப்பான அம்மிக்கல் குழவி வடிவில் ஒரு கல் அகப்பட்டதாம். முதிர்ந்த நெல் மணிகளை ஒரு பாறை மீது வைத்து, இந்தக் குழவிக்கல்லால் நசுக்கி உமி நீக்கிச் சாப்பிட்டனராம். சாப்பிட்டு முடிந்ததும் அந்தக் குழவிக்கல்லை ஒரு சுமைதாங்கி மீது வைத்துச் சென்றனராம். மறுநாள் வந்து பார்த்தபோது, அந்தக் கல் சிறுவர்கள் வைத்த இடத்தில் இல்லாமல், பாறை மீது நெல் அரைத்த நிலையில் இருந்ததாம். அந்தக் கல் தானாகவே செயல்படுவதாக எண்ணி, அதைத் தூக்கிக் குளத்தில் வீசினார்கள் என்றும், அடுத்த நாள் வந்து பார்த்தால் பழைய இடத்திலேயே இருந்தது என்றும், மறுபடியும் தூக்கி வீசினார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படியாகச் சிறுவர்கள் வீசுவதும், குழவிக்கல் மீண்டும் அதே இடத்திற்கு வருவதும் தொடர்ந்தன என்று அதிசயத்தைக் கூறுகின்றனர். பயந்துபோன சிறுவர்கள் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டனராம். பெரியவர்கள் வந்து சோதித்துப் பார்த்ததில், அது குழவிக்கல் அல்ல - பாணலிங்கம் என்று அறிந்துகொண்டனர். இந்த லிங்கமேனியில் சுயம்புவாகப் பிள்ளையாரின் வடிவம் தோன்றியுள்ளது. அதை பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பியுள்ளனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இவ்வூரிலுள்ள தென்னந்தோப்பு உரிமையாளர் ஒருவரிடம், பிள்ளையாருக்காகத் தேங்காய் தரும்படி அர்ச்சகர் கேட்டாராம். "உங்க பிள்ளையாருக்கு என்ன இரண்டு கொம்பா முளைத்துள்ளது?" என்று கேலி செய்தாராம் தென்னந்தோப்புக்காரர். தோப்பிலுள்ள அத்தனை தேங்காய்களிலும் இரண்டு கொம்புகள் முளைத்திருந்ததைப் பார்த்ததும், தோப்பின் சொந்தக்காரர் மிகவும் வருந்தி, பிள்ளையாரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாராம். பின்னர் பிள்ளையாரின் அருளால் பழையபடி மாறியது என ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் திருநீறு மேனியாக உள்ள செம்பொன் சிவலிங்க வடிவத்தைத் தரிசிக்கலாம். லிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யும்போது, குழந்தை வடிவத்தில், தும்பிக்கையுடனும், கால்களை நீட்டியவாறும் உள்ள பிள்ளையாரின் திருவுருவத்தைக் காணலாம். விழுதே இல்லாத மூன்று ஆலமரங்கள், ஒன்றோடொன்று இணைந்தவாறு உள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன் எனத் திருமூர்த்திகளாகக் கருதுகின்றனர். பசுமையான வயல்கள், நீர்நிலைகள் கொண்ட கிராமம். 300 வருடங்கள் பழமையான ஆலயம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.