அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் (முன்னூர்)

God Name : ஆடவல்லீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

ராஜநாராயண சதுர்வேதி மங்கலம், முன்னூற்று மங்கலம் என்ற பெயர்களைக் கொண்டிருந்த பழமையான கிராமம். மிகுந்த செருக்குடன் இருந்த பிரஹஸ்பதி, தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, நாரதரின் யோசனைப்படி, இங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டதாக வரலாறு. ஜாதகத்தில் குரு பகவானின் அருள் இல்லாதவர்கள், இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டால், குரு பகவானின் ஆசி கிடைக்கும் என ஐதீகம். தாருகாவனம் என்றும் பூலோக கைலாசம் என்றும் போற்றப்படும் இத்தலத்து இறைவனை பல மகரிஷிகள் பூஜித்துள்ளனர். பார்வதி தேவியார் தானே லிங்கத் திருமேனியை அமைத்து வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: ஆடவல்லீஸ்வரர், அம்பாள்: பிரஹந்நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஆடவல்லீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். தெற்கு நோக்கி தரிசனம் தருவது விசேஷம். மூலஸ்தானமுடைய மஹாதேவர் என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் பிரஹந்நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். வன்னி மரத்தடியில் விநாயகரும் நாகராஜாவும் காணப்படுகின்றனர். சனகாதி முனிவர்களுக்கு பிரத்யட்சமான தட்சிணாமூர்த்தி யோக முத்திரையுடன் தரிசனம் தருகிறார். சிவசுப்ரமண்யரின் திருவுருவம் அழகாக இருக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.