அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (மயிலம்)
God Name : மூலவர்: சுப்ரமண்யஸ்வாமி் உற்சவர்கள்: பாலசுப்ரமண்யர், முத்துக்குமாரஸ்வாமி, ஆறுமுகர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
சூர சம்ஹாரத்தின்போது அவனை இரு கூறாக்கினார் முருகப் பெருமான். தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான் சூரபத்மன். சூரபத்மனை சில காலம், வராஹ நதிக்கரையில் தவம் மேற்கொள்ளுமாறு பணித்தார் முருகன். அவ்வண்ணமே சூரபத்மனும், மயில் உருவம் கொண்ட இக்குன்றின் மீது தவமிருந்து, முருகனின் அருளைப் பெற்றான் என ஸ்தல வரலாறு. இந்த குன்று மயில் போன்ற வடிவத்தில் தோற்றமளிக்கின்றது. மலையின் வடக்குப் பக்கம் உயர்ந்துள்ளது. இதனால் மயுராசலம் என்றும் மயிலம் என்றும் பெயர் கொண்டது. சங்குகர்ணன் எனும் சிவகணம் சாபம் பெற்று, அதனால் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்து அல்லலுற்றான். சிறு வயதிலேயே சித்து வேலைகள் பல செய்ததால், பாலசித்தர் என்பர். இந்த மலையிலமர்ந்து முருகனை நோக்கி தவம் இருந்தான் சங்குகர்ணன். அவன் சிவஅபராதி என்பதால் முருகன் அவனுக்கு காட்சி தரவில்லை. வள்ளி-தெய்வயானை தேவியர்கள் இருவரும் அவனுக்காக பரிந்து பேசினர். முருகன் செவி சாய்க்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தேவியர்கள் சங்குகர்ணன் ஆஸ்ரமம் சென்றனர். தேவியர்களைத் தேடி வேடன் உருவில் வந்த முருகனோடு போர் புரிந்து, தோல்வியுற்ற சித்தனுக்கு, காட்சி தந்தருளினார் முருகப் பெருமான். சங்குகர்ணனின் விருப்பப்படியே இந்த மலை மீது கோவில் கொண்டு எழுந்தருளினார் என்று ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மிகுந்த வரப்பிரசாதி. மேற்கரங்களில் சக்தி ஆயுதம், சூலாயுதம் ஆகியன கொண்டும், கீழ்க் கரங்களில் அபய-வரத முத்திரைகள் கொண்டும், சதுர்புஜங்களுடன் தரிசனம் தருகின்றார். கலியாணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சேவல் கொடியும், வேலும் இருபுறமும் காட்சி தருகின்றன. மயில் வடக்கு நோக்கி இருப்பது விசேஷம். தாமரை ஏந்திய வள்ளி வலப்புறமும், நீலோற்பல மலர் ஏந்திய தெய்வயானை இடப்புறமும் உள்ளனர். இருவரும் திரிபங்கி நிலையில் நிற்கின்றனர். வினை தீர்த்த விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, அடுத்துள்ள சந்நிதியில் பொம்மபுர ஆதீன சிவஞான பாலஸ்வாமி சித்தரின் சமாதியையும் தரிசிக்கலாம். ஆதி ஸ்வாமிகள் நிஷ்டையிலிருந்த ஒடுக்கம், கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ளது. அதன் வடக்கு பக்கத்தில் மணிமண்டபமும், கீழே கல்லறை ஒன்றும் உள்ளது. இதனுள் ஒருவர் உட்காரலாம். பாலசித்தர் மறைந்தருளிய சிவலிங்கத்திற்கு விஸ்வநாதர் என்று பெயர். விசாலாட்சி அம்மனும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வள்ளி-தெய்வயானை உடனாய பாலசுப்ரமண்யர் பிரதான உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். பங்குனி உத்திரத் திருவிழாவில் உலா வருபவர். இரண்டாவது உற்சவ மூர்த்தியான முத்துக்குமார ஸ்வாமி பேரழகுடன் தரிசனம் தருகின்றார். மூன்றாவது உற்சவர், வள்ளி-தெய்வயானை சமேத மயிலேறும் ஆறுமுகர். வீரபாகுவுடன் கந்த சஷ்டி நாட்களில் உலா வருபவர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.