அருள்மிகு ஸ்ரீ அரசிலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாப்பட்டு

God Name : அரசிலீஸ்வரர் என்றழைக்கப்படும் அச்வதேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

இவ்வூர் மக்கள் ஒழுக்கமாக வாழ்ந்திருந்ததைச் சிறப்பித்துக் கூறும் வகையில் இவ்வூருக்கு 'ஒழுகறைப்பட்டு' எனப் பெயர் இருந்ததாம். அதுவே காலப்போக்கில் மருவி 'ஒழுந்தியாப்பட்டு' என மாறி உள்ளதாகக் கூறுகின்றனர். அரசிலிநாதர் மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருந்தான் சாளுக்ய மன்னன். அவருக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்வதற்கு என ஒரு நந்தவனத்தையும் உருவாக்கினான். ஒரு நாள் இறைவன், மான் உருவில் நந்தவனத்திற்குள் பிரவேசித்தார். மானைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தான் மன்னன். ஸ்தல விருட்சத்தின் கீழுள்ள புற்று ஒன்றில் ஒளிந்து கொண்டது மான். தனது அம்பால் புற்றைக் கிளறலானான் மன்னன். புற்றினுள் சுயம்புவாக இருந்த சிவலிங்கத் திருமேனியைக் கண்ட மன்னன் ஆனந்தித்தான். புற்றைக் கிளறியதால், லிங்கத்திற்குப் பின்னம் ஏற்பட்டது. மூலவரது நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இன்றளவும் இந்தக் காயத்தைக் காணலாம். இதனால் வருத்தமுற்ற மன்னன், இவ்விறைவனுக்குக் கோயில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வு ஒரு பிரதோஷ நாளில் நிகழ்ந்தது. இதனால் இத்தலம் ஒரு பிரதோஷ க்ஷேத்திரமாக விளங்குகிறது. (சூரிய அஸ்தமனத்திற்கு மூன்றேமுக்கால் நாழிகை முன்னதாகச் சிவ தரிசனம் செய்வது புண்ணியம்) தேவாரத் திருத்தலம்.
மூலவர்: அச்வதேஸ்வரர்் அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ அச்வதேஸ்வரர். குட்டையான பாணமும், குட்டையான ஆவுடையாரும் கொண்ட அழகிய லிங்கம். இவருக்கு அரசிலீஸ்வரர், திரு அரசிலி உடையார் ஆகிய திருநாமங்களும் உண்டு. கிழக்கு நோக்கிய சந்நிதி. 'அச்வதா' என்றால் அரசமரம் எனப் பொருள். அரசமரத்தைத் தனது இடமாகக் கொண்டவர் என்பதால் அச்வதேஸ்வரர் எனும் திருநாமம். தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி எழுந்தருளியுள்ளார். சதுர்புஜங்களுடன், நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றின் பரிவார தெய்வங்களும் அழகாக இருக்கின்றன. யோக தட்சிணாமூர்த்தி, ஞான நடராஜர், விஷ்ணு துர்க்கை, மற்றும் பிரயோக சக்கரத்துடன் காணப்படும் மகாவிஷ்ணுவையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.