அருள்மிகு வைகுண்டவாசல் பெருமாள் திருக்கோவில் (விழுப்புரம்)
God Name : வைகுண்டவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக வைகுண்டவாசப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் பரமபதநாதனாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சங்கு, சக்கரம், கதை ஆகியன கொண்டும் அபய ஹஸ்தம் கொண்டும் காட்சி தருகின்றார். ஸ்ரீ தேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்திகளின் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. மற்றுமோர் மூலவராக வரதராஜப் பெருமாள் தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி இருக்கின்றார். இரு தேவியர்களும் உடன் உள்ளனர். லட்சுமிநாராயணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், பெரிய திருவடி, சிறிய திருவடி ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். இத்தலத்தில் பரமபத வாசல் எப்போதும் திறந்திருக்கும் எனக் கூறுவர். ரதசப்தமி தினத்தன்று வெவ்வேறு வித அலங்காரங்களிலும், மூன்றாம் சனிக்கிழமையன்று ஸஹஸ்ரதீப ஊஞ்சல் சேவையிலும் பெருமாளைக் கண்டு மகிழலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.