அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில் (திருவாமாத்தூர்)
God Name : அபிராமேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
ஸ்ருஷ்டியில் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்த பசுக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து பிற மிருகங்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து, தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை, பாதுகாப்பு வேண்டி இத்தலத்தில் தவம் மேற்கொண்டன.
பிரத்யட்சமான இறைவன், பசுக்களின் தற்காப்பிற்காக, கொம்புகளை கொடுத்து அருளினார். ஆக்கள் (பசுக்கள்) பூஜித்ததால் இவ்வூர் ஆமாத்தூர் எனப் பெயர் கொண்டது. பசுக்களின் தாயாக இருந்து, இறைவன் வரம் அருளியமையால் கோமாத்ருபுரம் என்றும் தாயூர் என்றும் அழைக்கலாயினர்.
இலங்கை செல்லும் வழியில், இத்தலம் வந்த ராம - லட்சுமணர்கள், அகஸ்தியரின் அறிவுரைப்படி, இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். ஸ்ரீ ராமர் வழிபட்டதால் இங்குள்ள மூலவரை அபிராமேஸ்வரர் என்று அழைக்கின்றனர்.
முன்னாளில, இவ்வாலயம் ஆற்றின் கீழ்க்கரையில் இருந்தது. அரசவை வந்த இரட்டை புலவர்கள், இவ்விறைவன் மீது பாடிய கலம்பகத்தில், மேல் கரையில் இருப்பதாக பாடி விட்டனர். பிழையை எடுத்துக் காட்டியவுடன் மிகவும் வருந்தினார்கள். அவர்களின் வாக்கு பொய்க்காமலிருக்க, இடப்பக்கம் ஓடிய பம்பை ஆற்றை, வலப் பக்கமாக ஓடச் செய்தார்.
இறைவியை விலக்கி, இறைவனை மட்டும் வலம் வந்து வழிபடும் சுபாவமுள்ள ப்ருங்கி முனிவரை சோதிக்க, இறைவனிடம் பாதி உடல் கேட்டுப் பெற்றாள் அம்பிகை. வண்டு உருவம் கொண்டு, உடலைத் துளைத்து வலம் வந்தார் ப்ருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, முனிவரை வன்னி மரமாக மாற சபித்து விட்டார் என்று வரலாறு.
இவ்வாலயத்து வட்டப்பாறை அம்மனின் அளவிட முடியாத சக்தியையும், சத்தியத்தை நிலைநாட்டுவது பற்றியும் வழக்கத்தில் உள்ள கதை ஒன்று ஐதீகமாக இருக்கின்றது.
செல்வந்தர் ஒருவர், இறக்கும் சமயத்தில், தனது சொத்துக்களை, தனது இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து எழுதி வைத்தார். தம்பியை வஞ்சிக்க நினைத்த அண்ணன், அத்தனை சொத்துக்களையும் விற்று, வைரம் மற்றும் ரத்னங்களாக மாற்றி, குழல் போலுள்ள தனது கைத்தடியில் மறைத்து வைத்து விட்டான்.
ஊருக்கு திரும்பி வந்த தம்பியிடம், தந்தை சொத்து ஒன்றும் மீதம் வைக்கவில்லை என்று பொய்யுரைத்தான். அண்ணனின் பேச்சை நம்பாத ஊர் பெரியவர்கள், வட்டப்பாறை அம்மன் முன்பாக அவனை நிறுத்தி, சத்தியம் செய்யச் சொன்னார்கள்.
தன்னிடமுள்ள கைத்தடியைத் தவிர தன்னிடம் ஒன்றுமில்லை எனக் கூறிவிட்டு, அந்த கைத்தடியை தன் தம்பியிடமே கொடுத்து, சிறிது நேரம் வைத்திருக்க சொல்லிவிட்டு, வட்டப்பாறை அம்மன் முன்னால் நின்று கொண்டு, என் கையில் ஒன்றுமேயில்லை என பொய் சத்தியம் செய்தான். பிறகு தம்பியிடமிருந்து கைத்தடியை வாங்கிக் கொண்டான்.
இந்த நிகழ்வைப் பற்றியும், தான் எப்படி சாமர்த்தியமாக தனது தம்பியை ஏமாற்றியதை பற்றியும், தனது நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்த மூத்தவன், வட்டப்பாறை அம்மன் தன்னை ஒன்றும் செய்து விடவில்லை எனவும் இகழ்ந்தான்.
ஊர் ஜனங்கள் பார்த்து திகைக்க, திடீரென ஒரு நாகப்பாம்பு, வட்டப்பாறையின் கீழிருந்து சீறிக் கொண்டு கிளம்பி அவனை துரத்தியது. பயத்தால் தலைகால் தெரியாது ஓடினான். இங்கிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் எனும் ஊரில், அவனை கடித்தது. கைத்தடி கீழே விழுந்து உருண்டு, அதிலிருந்த வைரங்கள் தரையில் சிதறி, அவனுடைய இழிசெயலை காட்டிக் கொடுத்து விட்டது.
இந்த பாம்பின் வால் திருவாமத்தூர் முத்தாம்பிகையின் திருமேனியை சுற்றிக் கொண்டும், பாம்பின் தலை தும்பூரில், நாகக்கன்னியாகவும் காணப்படுகின்றது.
தேவாரத்திருத்தலம்
மூலவர்: அபிராமேஸ்வரர், அம்பாள்: முத்தாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாகவும், சுயம்புவாகவும் எழுந்தருளி தரிசனம் தருகின்றார் அபிராமேஸ்வரர்.
லிங்கத்திருமேனியில், பசுவினுடைய குளம்பின் சுவடுகள் காணப்படுகின்றன. இடப்புறமாக சாய்ந்த நிலையில் காட்சி தருகின்றார். சந்திரனின் பிறை போல் வளைந்து காணப்படுவதால் வேணி சூடிய அழகர் எனும் பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி.
அம்பாள் முத்தாம்பிகை மேற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி அருள் புரிகின்றாள். சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. முத்தை வென்ற முறுவலாள், முத்தநகை அழகு உடையாள், அழகிய ஸ்வரூபம் கொண்டவள் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அன்னையின் திருமேனியின் மீது பாம்பின் வால் நீண்டிருப்பதை அபிஷேக சமயங்களில் பார்க்கலாம். ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பிகை.
ஸ்வாமியும் அம்பாளும் எதிர் எதிராக கோவில் கொண்டிருப்பதே தனி சிறப்பு. மாசி மாதம் முழுவதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மனின் திருவடிகளருகே படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. த்வஜஸ்தம்பத்தில் காணப்படும் ரிஷபாரூடரின் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது.
அம்பிகையின் பிரகார வலச்சுற்றின் தென்புறமுள்ளது வட்டப்பாறை சத்திய மண்டபம். அன்னையின் திருவடிகள் வடிவமைக்கப்பட்ட அமைப்பு. இதன் மேல் கை வைத்து சத்யம் செய்வோர், பொய் உரைப்பின், மீளாத்துயர் கொள்வார்கள் என ஐதீகம்.
பிட்சாடனர், சட்டநாதர், 1008 லிங்கம், குபேர லிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள், ஆகாச லிங்கம், வல்லப கணபதி மற்றும் அநேக மூர்த்தங்களை உள்சுற்றிலும், வெளிச்சுற்றிலும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.