அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோவில் (ராம்பாக்கம்)
God Name : ஸ்ரீ லட்சுமிநாராயணர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
பெண்ணை ஆற்றின் கரையெங்கும் கரும்புகள் விளைந்து பசுமையாகக் காணப்படும். இவ்வு+ருக்குப் பெருமை சேர்க்கும் ஆலயம். மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமிநாராயணர், கமல பீடத்தில் வீற்றிருந்த கோலத்தில், இடது தொடையில் மஹாலட்சுமியை இருத்தி, இடது கரத்தால் அணைத்தவாறு சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி பூதேவி உடனாய உற்சவ மூர்த்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வேதவல்லித் தாயாரையும், ஆண்டாளையும் தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். ருக்மணி-சத்யபாமா சமேத வேணுகோபாலஸ்வாமி, விஷ்வக்சேனர், பெரிய திருவடி, சிறிய திருவடி, ஆழ்வாராதிகள், ராமாநுஜர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். ஸ்ரீ ராமர் சந்நிதியில் ராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், ஹனுமன் ஆகியோரை சேவிக்கலாம். வில் ஏந்தி கம்பீரமாக நிற்கும் ராஜாராமனின் அழகு அற்புதம். திருமுகத்தில் பிரகாசமாக ஒரு புன்சிரிப்பு தவழ்கிறது. 25 அடி உயரம் கொண்ட தீப ஸ்தம்பம். நாற்புரங்களில் சங்கு, சக்கரம், கருடன், ஹனுமன் ஆகிய திருவுருவங்களை செதுக்கியுள்ளனர். திரிபுராந்தகேஸ்வரர் ஆலயம் ஒன்றும் இவ்வு+ரில் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.