அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (பூவரசங்குப்பம்)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமர்ந்து தவம் இருந்த சப்த ரிஷிகளுக்கு, காட்சி தர பிரத்யட்சமானதாக ஐதீகம். இரண்யவதம் முடித்த பின், பிரஹ்லாதனுக்கு காட்டியருளிய கோலத்தினை, இங்கு காட்டியருளியதாக தல வரலாறு. சமண மதத்தை வளர்ப்பதற்காக, மற்ற மதங்களையும் வேதங்களையும் அழிக்க நினைத்த பல்லவ அரசன் ஒருவன், நரஹரி என்பவரின் சாபத்திற்கு ஆளாகி, பல துயரங்களை அனுபவித்து, தனது தவறுகளை உணர்ந்து வந்த வேளையில், பூவரச மரம் ஒன்றின் கீழ், பூவரச இலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவுருவத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அங்கு நின்று கொண்டிருந்த நரஹரியும் அவனை துயரத்திலிருந்து மீட்டு, இங்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். அவ்வாறே ஆலயம் நிர்மாணித்த அரசன், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் திருவருளைப் பெற்றான் என தல வரலாறு. 17 வருடமாக ஊமையாயிருந்த இளம் பெண் ஒருவளை, பேச வைத்த நரசிம்மர் என்று போற்றுகின்றனர். தட்சிண அஹோபிலம் எனப் போற்றப்படுகிறது.
பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கர்குடி ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. மத்தியில் இருப்பது பூவரசங்குப்பம். மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அனுக்ரஹ மூர்த்தியாக எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், இடது கரத்தால் மஹாலட்சுமியை அணைத்தபடியும், வலது கரத்தால் ஆசி வழங்கியும், இடது காலை மடக்கியும், வலது காலை தொங்கவிட்டும் வீற்றிருந்த கோலம். பாதகமலங்களை கமலமலர் தாங்குகிறது. தாயார் ஸ்ரீ மஹாலட்சுமி எம்பெருமானின் மடியில் அமர்ந்து, ஒரு கண்ணால் பெருமானையும், இன்னொரு கண்ணால் சேவார்த்திகளைப் பார்த்தபடியும், வலது கரத்தால் பெருமானை அணைத்தபடியும், இடது கரத்தில் பத்மத்தை ஏந்தியும், சிரித்த திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். அஷ்ட நரசிம்ம க்ஷேத்திரங்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.