அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (திருக்கோவிலூர் - மேலூர்)

God Name : மூலவர்: திரிவிக்ரமப் பெருமாள், உற்சவர்: தேஹளீச பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தி, தானங்கள் பல செய்து கொண்டிருந்த மகாபலியின் வேள்விச்சாலைக்கு, வாமனனாக வந்த மகாவிஷ்ணு, தனக்கும் தானமாக மூன்றடி மண் தரும்படி கேட்டார். இந்த சிறுவனின் பாத அளவிற்கு மூன்றடி அளந்து கொடுப்பதால், பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை என்று எண்ணிய மகாபலி, தானத்திற்கு இசைந்தான். வாமனனாக வந்தவன் விஸ்வரூபம் எடுத்து திரிவிக்ரமனாக மாறி, பூமியை ஓரடியாகவும், வானத்தை இரண்டாவது அடியாகவும் அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? எனக் கேட்டார். கொடுத்த வாக்கை காப்பாற்ற, தனது தலையை காண்பித்து அளந்து கொள்ள சொன்னார் மகாபலி என்பது புராண வரலாறு. இந்த திரிவிக்ரம கோலத்தை காணும் பாக்யம் தனக்கு கிட்டவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ம்ருகண்டு மகரிஷி, நாரதரின் யோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார். ம்ருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த வயதான வேதிய தம்பதியினர் பசியாற உணவு கேட்டனர். முனிவரின் மனைவி மித்ரவதி அவர்களுக்கு விருந்தோம்பல் செய்தாள். விருந்துண்டவர்கள் திடீரென மறைந்தனர். அங்கு பிரத்யட்சமான பெருமாள் ம்ருகண்டு முனிவர் வேண்டியபடி, திரிவிக்ரம கோலத்தை காட்டியருளினார். பின்னர் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டார் என ஸ்தல வரலாறு. க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருந்த பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும், ம்ருகண்டு ஆஸ்ரமம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது. முதலில் வந்த பொய்கை ஆழ்வார், ஆஸ்ரமத்திற்குள் இருந்த முனிவரிடம் இன்றிரவு மட்டும் இங்கு தங்க இடம் உண்டா? எனக் கேட்டார். ஒருவர் படுக்கலாம் என இடைக்கழியைக் காண்பித்தார் முனிவர். சிறிது நேரம் கழித்து வந்த பூதத்தாழ்வாரும் இதே கோரிக்கையை முன்வைக்க, இருவர் அமரலாம் உள்ளே வாரும் என பதில் வந்தது. மூன்றாமவராக வந்த பேயாழ்வாரும் இதே விண்ணப்பத்துடன் வந்தார். ஒருவர் படுக்கலாம், இருவரானால் அமரலாம், மூவரானால் - மூவரும் நிற்கலாம் என பதில் வந்தது. மழையும் நிற்கவில்லை. கும்மிருட்டு நேரம். மூவரும் நின்றபடியே, பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பற்றி பாடிய வண்ணமிருந்தனர். திடீரென நெருக்கம் அதிகமானது. நான்காவதாக ஒரு ஆள் வந்திருப்பதை மூவரும் உணர்ந்தனர். ஞானக்கண்ணால், வந்திருக்கும் நான்காவது ஆள் நாராயணனே என தெரிந்துகொண்டு, திருவந்தாதி பாடினர். அத்துணை பெருமைகளை உடைய ஸ்தலம். வாமன - திரிவிக்ரம அவதார ஸ்தலம். கண்ணபிரானுக்கு உகந்த ஸ்தலம். திவ்யபிரபந்தம் முதன்முதலில் பாடப்பெற்ற ஸ்தலம் போன்ற பெருமைகளுடைய ஸ்தலம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்று.
மூலவர்: திரிவிக்ரமன், உற்சவர்: தேஹளீச பெருமாள், தாயார்: புஷ்பவல்லி. மூலஸ்தானத்தில் மூலவராக திரிவிக்ரமப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, பிரம்மாண்டமான நெடிதுயர்ந்த திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். உலகளந்த பெருமாள் என போற்றுகின்றனர். நின்ற - நடந்த (உலகளந்த) கோலம். இடது கால் மகாபலியின் மீது ஊன்றியும், வலது கால் விண்ணை அளப்பதாகவும் வியாபித்து நிற்க, எஞ்சிய ஓரடி எங்கே? என கேட்பது போல வலக்கை விரல் நீட்டிய கோலம் அற்புதம். இடக் கரத்தில் இருக்க வேண்டிய சங்கு வலக்கரத்தில் உள்ளது. மகாபலி சக்ரவர்த்தி, சுக்ராச்சார்யார், ம்ருகண்டு மகரிஷியும் அவரது பத்தினியும், லட்சுமி தேவி ஆகியோர் சூழ்ந்துள்ளனர். காஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் செதுக்கிய சிற்பம் போலன்றி, இவர் தனியே நிற்கும் வடிவம். அத்தி மரத்தால் உருவான அழகிய திருமேனி என்பர். ஸ்ரீ தேவி, பூதேவி சஹிதமாக சேவை சாதிக்கும் உற்சவர் தேஹளீசன் பேரழகுடன் விளங்குகிறார். தாயார் புஷ்பவல்லி எனப்படும் பூங்கோவல் நாச்சியார் தனி சந்நிதி கொண்டுள்ளார். க்ஷேத்ர பாலகராக வேணுகோபாலர் எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத்தால் உருவான திருமேனி. பாமா - ருக்மணி தேவியர்கள் உடன் எழுந்தருளியுள்ளனர். இவரை முதலில் சேவித்து, பின்னரே மூலவரை சேவிக்கும் சம்ப்ரதாயத்தை இங்கு கடைபிடிக்கின்றனர். ஒரே கல்லால் உருவான கருடஸ்தம்பமும் அதன் மீது எழுந்தருளியுள்ள கருடாழ்வாரும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரகார வலச்சுற்றில் லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ராமர், ஆண்டாள், வீர ஆஞ்சநேயர், சுக்ராச்சார்யார் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வாமனரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. தனி சந்நிதியில் விஷ்ணு துர்க்கை காவல் தெய்வமாக எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.