அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் (திருவெண்ணெய் நல்லூர்)

God Name : கிருபாபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி அருள் செய்ததால், இத்தலம் திருவருள்துறை எனப் பெயர் கொண்டது. பாற்கடல் கடையும்போது தோன்றிய ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானின் உஷ்ணத்தைத் தணிக்க, ஈஸ்வரி பசும் வெண்ணையினால் கோட்டை கட்டி, அதன் நடுவே அமர்ந்து தவமிருந்தாள். இதனால் திருவெண்ணெய் நல்லூர் எனும் பெயர் இவ்வூருக்குக் கிடைத்தது. மகிஷனை வதம் செய்ததினால் ஏற்பட்ட கோர உருவத்தையும் தோஷங்களையும் நீக்க, பார்வதி தேவி பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அன்னை பார்வதியின் நந்தவனத்தில், மலர் பறித்துக் கொண்டிருந்த இரு பெண்களைக் கண்டு சித்தம் தடுமாறிய சுந்தரரைக் கண்டித்து, 'பூலோகம் சென்று சலனம் இல்லாத மனதுடன் என்னை வந்தடைவாயாக' எனக் கூறி அனுப்பிவிட்டார் சிவபெருமான். திருநாவலூரில், சடையனார்-இசைஞானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சுந்தரர், நம்பியாரூரன் என்ற பெயரில் வளர்ந்து வந்தார். நரசிங்க முனையர் எனும் அவ்வூரின் அரசனால் ஸ்வீகரிக்கப்பட்டு, செல்வந்தனாக வளர்ந்தார். திருமணப் பருவத்தை எட்டியதும், புத்தூரிலுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். அந்தணர்க்குரிய வைதீகத் திருவுடன் விளங்கிய நம்பியாரூரன் மணப்பந்தல் சென்று அமர்ந்தபோது, ஒரு கிழவன் அங்கு வந்து, 'நம்பியாரூரன் எனக்கு அடிமை, எனவே திருமணத்தை நிறுத்துங்கள்' எனக் கூறி, ஆதாரமாக மணமகனது பாட்டன் எழுதித் தந்த ஓலையைக் காண்பித்தார். 'ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனை அடிமைப்படுத்துவது நியாயமா?' எனக் கேட்டு நம்பியாரூரன், அந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார். 'இவன் கிழித்தது பிரதி ஓலையே, மூல ஓலை எனது ஊரில் இருக்கின்றது' என்று கூறிய கிழவர், சபையினர் அனைவரையும் திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்து வந்தார். திருவெண்ணெய் நல்லூர் சபையினரிடம் நியாயம் வழங்குமாறு கேட்டார் பெரியவர். மூல ஓலையைப் படித்த சபையினர், நம்பியாரூரனின் பாட்டன் கையெழுத்துதானா என்று ஆவணங்கள் மூலம் சரிபார்த்து, பெரியவரின் வாதத்தை ஏற்றுத் தீர்ப்பு வழங்கினர். கிழவரின் பின்னே செல்லுமாறு கூறிய சபையினரின் தீர்ப்பிற்கு தலை வணங்கி, நம்பியாரூரன் எனப்படும் சுந்தரர் பின்தொடர, வயதான வேதியனாக வந்த பெரியவர், கிருபாபுரீஸ்வரர் ஆலயத்துள் நுழைந்து மூலஸ்தானத்தின் உள் சென்று மறைந்தார். பிராது கொடுத்த கிழவர் மறைந்து, ரிஷபாரூடராய் தரிசனம் தந்த தன்னைத் தடுத்தாட்கொண்டவர் இறைவனே எனத் தெரிந்துகொண்ட சுந்தரர் பரவசப்பட்டார். 'பித்தா... பிறைசூடி...' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். முருகவேள் மயில் மீது நடனம் புரிந்து அருணகிரிநாதருக்குக் காட்டியருளிய ஸ்தலம். இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: கிருபாபுரீஸ்வரர், அம்பாள்: மங்களாம்பிகை. த்வஜஸ்தம்பத்தினருகே அமர்ந்துள்ள கலி தீர்த்த கணபதியை வழிபட்டு ஆசி பெற்று ஆலயச் சுற்றைத் தொடங்குகின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் கிருபாபுரீஸ்வரர். உயர்ந்த பாணத்துடன் கூடிய அழகான திருமேனி. சுயம்பு மூர்த்தம். தடுத்தாட்கொண்டநாதர் என்ற திருநாமமும் உண்டு. சதுர்புஜங்கள் கொண்ட அழகுத் திருவுருவுமாக, சாந்த ஸ்வரூபிணியாக, சர்வாலங்கார பூஷிதையாக கிழக்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள் அம்பிகை மங்களாம்பிகை. வேற்கண் நங்கை என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ சக்கர பீடம். மேரு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சங்கநிதி, பதுமநிதியுடனும் சிம்ம வாகனத்துடனும் காணப்படுகிறாள். ஸ்தல விநாயகரான பொல்லா பிள்ளையார் - வாய் பேசாத ஊமையான மெய்கண்ட தேவரை பேசவைத்தவர். உள்ளே நுழைந்ததும் வலப்புறமாக வழக்காடு மண்டபம் காணலாம். இடுப்பில் செருகிய ஓலையுடன் வயோதிக வடிவத்தில் சுந்தரர் சுதைச் சிற்பமாக உள்ளார். ஆலய மண்டபத்திற்கு மேலாக ரிஷபாரூடருக்கு விமானக் கோவில் அமைத்துள்ளனர். சுந்தரரை தடுத்தாட்கொண்டபோது காட்சி அளித்த அதே நிலையிலேயே இங்கும் காட்சி தருகின்றார். அதற்கு எதிரே - கீழே அடிமை ஓலையுடன் நிற்கும் சுந்தரருக்கு சந்நிதி. முதியவராக வந்த சுந்தரரின் திருவுருவம் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.