அருள்மிகு இடையாற்றீஸ்வரர் திருக்கோவில் (திரு இடையாறு - டி. எடையார்)

God Name : இடையாற்றீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

கைலாசத்தில் ஏகாந்தமாக அமர்ந்து உமையன்னைக்கு சிவரகசியத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். கிளி வடிவில் இருந்த ஒரு முனிவர், ஒளிந்திருந்து இந்த உபதேசத்தை கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் பூலோகத்தில் கிளியாக பிறந்து அல்லல் படும் சாபத்தைப் பெற்றார். வியாசருக்கு மகனாக கிளி முகத்துடன் பிறந்து, சுகர் என்ற பெயருடன் வளர்ந்து, இவ்வாலயத்து மருத மரத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டார். கடுந்தவமிருந்து பிரம்மத்தை உணர்ந்து, சுகபிரம்ம மகரிஷி ஆனார். ஜோதிடக் கலையை அறிந்தார். சுகபிரம்ம மகரிஷியின் சிலை வடிவம் மருத மரத்தடியில் உள்ளது. சப்தகன்னியர்கள் இவ்விறைவனை வழிபட்டு, தங்களது தோஷம் நீங்கப் பெற்றனர். உரோம மகரிஷி, ப்ருகு முனிவர், அகஸ்தியர் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம் இது. அகஸ்தியர் இத்தலத்தில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டுள்ளார். பெண்ணையாற்றுக்கும் மலட்டாற்றுக்கும் இடையே இருப்பதால் இவ்வூரை இடையாறு என்கின்றனர்.
மூலவர்: இடையாற்றீஸ்வரர், அம்பாள்: ஞானாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் இடையாற்றீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். இவருக்கு மருதீசர், ஆதிமத்யார்ஜுணேஸ்வரர், இடையாற்று நாதர் ஆகிய பல திருநாமங்கள் உண்டு. அம்பாள் ஞானாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார். சூட்சுமமத்யாம்பிகை, சிற்றிடை நாயகி ஆகிய பல திருநாமங்கள் இவருக்கு உண்டு. பால மருத கணபதி எனும் அரிய ரூபத்தை தரிசிக்கலாம். லட்டு, பலாச்சுளை, கரும்பு ஆகியவற்றை அபய ஹஸ்தமாகக் கொண்ட சதுர்புஜங்களுடன் விக்னேசானுக்ரஹ மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். பொல்லாப் பிள்ளையார் மற்றும் கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகானவை. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 15, 16 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. ஸ்தல விருட்சமான மருத மரத்துடன் பன்னீர் மரமும் இணைந்து காணப்படுகின்றது. இதன் கீழே சுகபிரம்ம ரிஷியின் சுதை சிற்பம் தரிசிக்கலாம். அகஸ்தியருக்கு திருமணக்கோலம் (மாலை மாற்றும் கோலம்) காட்டியருளிய ஸ்தலம் இது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.