அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் (ஜம்பை)
God Name : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
சண்பை எனப்படும் ஒரு வகை புல் மிகுந்து காணப்பட்டதால், இவ்வூரை சண்பை என்று அழைத்தனர். காலப்போக்கில் அதுவே ஜம்பை என்றானது.
ஆற்றினுள் உள்ள சிறிய மடு ஒன்றில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை, வாளைமீன் ஒன்று சுற்றி சுற்றி வந்து பூஜித்ததாம். சித்தர் ஒருவரே மீன் வடிவில் இருப்பதாக கூறுவர்.
யானை ஒன்று மடுவில் இறங்கி கலக்கி நீரை சேறாக்கியது. சிவலிங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக எண்ணி கோபம் கொண்ட வாளை மீன், தனது வாலால் யானையை ஓங்கி அடித்தது.
காயம்பட்டு வந்த யானையை கவனித்த அரசன், மடுவிற்கு சென்று ஆராய்ந்ததில், மடுவிற்குள்ளிருந்த சிவலிங்கம் கிடைத்தது. அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, கோவில் ஒன்றை நிர்மாணித்தான். நீர்நிலையின் உள்ளே கிடைத்ததால் ஜம்புகேஸ்வரர் என்று பெயர்.
மூலவர்: ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர். வட்டவடிவமான பீடத்தில் உயர்ந்த பாணம் கொண்டு காட்சி அளிக்கின்றார். ருத்ராட்ச மாலையும், திருநீற்றுப் பட்டையும் மேலும் அழகூட்டுகின்றது.
அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் மிகவும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.