அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில், நெய்வெணை

God Name : சொர்ணகடேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

ஒழுக்கமின்றி தகாத செயல்களில் ஈடுபட்டதால், இறைவன் பெருமழையையும் வெள்ளத்தையும் உண்டாக்கினார். மக்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் வெள்ளத்தில் அழிந்தன. தவறை உணர்ந்து திருந்தி, இறைவனை வழிபட்டு மன்னிப்பு கோரினர். அணை கட்டும் அளவிற்கு நெற்குவியலை தந்துதவினார் இறைவன். அப்போது அந்தணர் ஒருவர் வந்து மண்குடங்களைக் கொடுத்துச் சென்றார். அவர் சென்றதும் மண்குடங்கள் அனைத்தும் பொன்குடங்களாக மாறின. அந்தணராக வந்தவர் இறைவன் வெண்ணையப்பரே என்பதை மக்கள் உணர்ந்து நல்வழியில் இறைவனை வழிபட்டனர். இதனால் இவ்வூருக்கு "நெல்லணை" எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் "நெய்வெணை" என்றானது. சனகாதி முனிவர்கள் வெண்ணையப்பரை வழிபட்டு, பரம்பொருளின் தத்துவத்தை உணர்ந்தனர். ஞானசம்பந்தரின் வாக்குப்படி, இவ்விறைவனை வழிபடுபவர்கள் வறுமை நீங்கப்பெற்று புகழோடு வாழ்வார்கள்.
மூலவர்: சொர்ணகடேஸ்வரர், அம்பாள்: நீலமலர்க்கண் அம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சொர்ணகடேஸ்வரர். இவருக்கு வெண்ணையப்பர் என்ற பெயரும் உண்டு. இவரைப் "பொன்குடம் கொடுத்த நாயனார்" என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சுயம்பு மூர்த்தம். ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதி. அன்னை நீலமலர்க்கண் அம்மை கிழக்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு "பிரஹந் நாயகி" என்ற பெயரும் உண்டு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.