அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில் (திருநாவலூர்)

God Name : பக்தஜனேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

பூலோகத்தில் தவம் செய்து சிறந்த ஸ்தலமாக தேடிக் கொண்டிருந்த பார்வதிக்கு, திருநாவலூரைக் காட்டினார் ஜம்புநாதர். ஜம்புநாத தீர்த்தத்தைக் கொண்டும், விநாயகர் கொண்டு வந்த மலர்களாலும், மனக்கட்டுப்பாட்டுடன் தியானம் செய்து இறைவனை அடையலாம் என்று அம்பிகை வழி காட்டியதால் மனோன்மணி எனப் பெயர் கொண்டாள். பக்தர்களை ரட்சிக்க பக்தஜனேஸ்வரர் எனும் திருநாமத்துடன் இங்கேயே எழுந்தருள வேண்டும் என அம்பிகை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இறைவன் இங்கு கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இவ்வூர் முழுவதும் நாவல் மரங்கள் மிகுந்து காணப்பட்டதால், நாவலூர் எனப் பெயர் கொண்டது. அந்தகாசுர போரின் போது, இறந்தவர்களையெல்லாம் மீண்டும் பிழைக்க வைத்துக் கொண்டிருந்த சுக்கிரன் மீது கோபம் கொண்டு அவரை விழுங்கிய சிவபெருமான், பல வருடங்களாக வயிற்றுக்குள் யோகத்தில் இருந்த சுக்கிரன் மீது கருணை கொண்டு, அவரை வெளிவரச் செய்து, கிரகப் பதவியும் தந்ததாக வரலாறு. அத்தகைய சுக்கிரன் இங்கு லிங்க ரூபத்தில் இருக்கின்றார். ஆலயத்தின் மேற்கே கோமுகி ஓடையும், ஊருக்கு தெற்கே கெடில நதியும் (1 கி.மீ), வடக்கே பெண்ணையாறும் ஓடுகின்றன. நாலாபுறமும் வயல்களால் சூழப்பட்ட அழகிய கிராமம். ஆதிசேஷனின் விஷ மூச்சுக் காற்றால் உடம்பெல்லாம் கருப்பான கருடன், தனது கருமை நிறத்தைப் போக்கிக் கொள்ள, இங்குள்ள ஜம்புநாத தீர்த்தத்தில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு, மேனியை வெண்மையாக்கிக் கொண்டது. கருடன் உருவாக்கிய நதி, கருடநதி எனப் பெயருற்று, பின்னர் கெடில நதி என்றானதாக கூறுவர். நம்பியாரூரன் எனப்படும் சுந்தரரின் அவதார ஸ்தலம் இது. சுந்தரரின் வளர்ப்புத் தந்தை சிவனடியார்களை வரவழைத்து அன்னமிட்டு 100 பொற்காசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் அருவருப்பான கோலத்தில் வந்த ஒரு திகம்பரரைப் பார்த்து அனைவரும் சலித்துக் கொண்டனர். சுந்தரரின் வளர்ப்புத் தந்தையோ அவரையும் சமமாகப் பாவித்து தொண்டாற்றினார். அனைவரையும் சமமாகப் பாவிக்கும் நற்பண்புகளையுடைய அவரை இறைவன் ஆட்கொண்டார். இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: பக்தஜனேஸ்வரர், அம்பாள்: மனோன்மணி அம்மை. கொடிமரத்தடியிலுள்ள சுந்தர விநாயகரை வணங்கி ஆசி பெற்று கோவிலுக்குள் செல்கின்றனர். கோவிலின் உள்ளே நுழைந்ததும், தென்கிழக்கு மூலையில் உள்ள சந்நிதியில் சுந்தரமூர்த்தி நாயனாரை தரிசிக்கலாம். கைகளில் தாளம் ஏந்தியபடி உள்ளார். பரவை நாச்சியாரும், சங்கிலி நாச்சியாரும் உடன் உள்ளனர். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பக்தஜனேஸ்வரர். உயரமான பாணம் கொண்டு, வட்ட வடிவ ஆவுடையாருடன் தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. இவருக்கு ஜம்புபுரேசர், திருநாவலேஸ்வரர், திருத்தொண்டிஸ்வரமுடையார், மனோன்மணி நாயகர் ஆகிய திருநாமங்களும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் மனோன்மணி அம்மை நின்ற கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பாசம்-அங்குசம் கொண்ட மேற்கரங்கள், மற்றும் அபய-வரத முத்திரைகளுடன் கூடிய கீழ்க்கரங்கள் கொண்ட அழகிய திருமேனி. நாவலாம்பிகை, சுந்தராம்பிகை ஆகிய திருநாமங்களும் உண்டு. தட்சிணாமூர்த்தி மற்றும் துர்க்கை மட்டுமே கோஷ்ட மூர்த்தங்கள். ரிஷபத்தின் மீது சாய்ந்தும், ஒரு கையை அதன் மீது ஊன்றிக்கொண்டும், மறு கையில் சுவடி கொண்டும், ஜடாமுடியுடனும் காணப்படும் ரிஷபாந்தக தட்சிணாமூர்த்தி வித்தியாசமான அழகுடன் இருக்கின்றார். வலச்சுற்றில் கிழக்கு பார்த்த சந்நிதியில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூலவராக சேவை சாதிக்கின்றார். ஆறடி உயர நெடிதுயர்ந்த திருமேனி. ஸ்ரீ தேவி, பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஆஞ்சநேயர், ஸ்ரீநிவாசர், ராம-லக்ஷ்மணர், சீதா தேவி ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. வடக்கு சுற்றில் சப்த ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கங்களை தரிசிக்கலாம். சுக்கிரன் வழிபட்ட பார்கவ லிங்கம் ருத்ராட்ச பந்தலின் கீழ் தரிசிக்கலாம். பங்குனி மாதம் 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில், காலை வேளைகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கோவிலுக்கு வெளியே சுந்தரர் மடம் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.