அருள்மிகு உளுந்தாண்டவர் திருக்கோவில் (உளுந்தூர்பேட்டை)
God Name : உளுந்தாண்டவர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
பல வணிகர்கள் கூடும் திருமுனைப்பாடி சந்தைக்கு மிளகு மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு வியாபாரியை, வழிமறித்த முதியவர் ஒருவர், தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாகவும், சிறிது மிளகை கொடுத்தால் நெற்றியில் பற்று போட்டுக் கொள்வதாகவும் கூறினார்.
"இவைகளெல்லாம் உளுந்து மூட்டைகள், என்னிடத்தில் மிளகு ஒன்றுமில்லை," என பொய்யுரைத்தான் வியாபாரி.
சந்தைக்குப் போனதும், வியாபாரம் செய்வதற்காக மிளகு மூட்டைகளை அவிழ்த்தான். ஆனால், அவை அனைத்தும் உளுந்து மூட்டைகளாக இருந்தன. பயந்துபோய், முதியவரை சந்தித்த இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தால், அங்கு ஒரு சிவலிங்கம் மட்டும் இருந்ததாம். தான் செய்த பிழைக்கு மன்னிப்பு வேண்டினான்.
உளுந்தெல்லாம் பழையபடி மிளகாக மாறின. இந்த அதிசயங்களை நிகழ்த்தியவர் என்பதால் இவ்விறைவனுக்கு உளுந்தாண்டவர் என்று பெயர் வந்தது.
மூலவர்: உளுந்தாண்டவர், அம்பாள்: லோகநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக உளுந்தாண்டவர் எழுந்தருளியுள்ளார். இவர் சத்யோஜாத சிவம், சுயம்பு மூர்த்தம்.
வடமொழியில் இவரை மாஷாபுரீஸ்வரர் என்பர். மேற்கு பார்த்த சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
கிழக்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் லோகநாயகி எழுந்தருளியுள்ளார். இவர் சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி கொண்டவர்.
சௌம்ய ஸ்ரீ சக்கர பூரண மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதி இடபாகம் கொண்டதாகும்.
காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்பாள் மீதும், மாலை நேரங்களில் ஸ்வாமி மீதும் படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
வலச்சுற்றில் பிள்ளையார், மஹாலட்சுமி, பைரவர், உச்சிஷ்ட கணபதி, காசி விஸ்வநாதர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், நால்வர் மற்றும் கோஷ்ட தெய்வங்களை காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.