அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (பாதூர்)

God Name : பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

இத்தலம் கருட மற்றும் சேஷ நதிக்கு தெற்கே அமைந்துள்ளது. இத்தலத்து பெருமாளை 36 முறை பிரதட்சிணம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவர் எனக் கூறுகின்றனர். பத்து ஊர்களின் நிர்வாகத்தை இங்கிருந்தபடியே நடத்தினார்களாம். அதனால் 'பத்தூர்' எனப் பெயர் பெற்று, பின்னர் மருவி பாதூர் ஆனதாக கூறுகின்றனர். எல்லைக்காவல் படை இங்கு தங்கியிருந்ததால் பாதூர் எனப் பெயர் கொண்டதாகவும் கூறுகின்றனர். (பாது என்றால் காவல்). அஹோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகிய வெண்சடகோப ஸ்ரீநிவாச மஹாதேசிகனின் ஜீவ பிருந்தாவனம் இங்கு உள்ளது. தோல் வியாதிகளிலிருந்து குணமடையவும், அழகு மிளிரவும் இத்தலத்தில் பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். இவரை பேரழகர் என்று போற்றுகின்றனர். அலர்மேல் மங்கை தாயாரை அழகுத் தாயார் என்று போற்றுகின்றனர். திருமகள், ஆண்டாள், விஷ்வக்சேனர், சிறிய திருவடி, பெரிய திருவடி, மத்வாச்சாரி, ராமாநுஜர், மகா தேசிகர் ஆகியோரை சேவிக்கலாம். நவீன திருக்கண்ணாடி அறை அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. இத்தலம் கருட மற்றும் சேஷ நதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.